பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 க. சமுத்திரம் "ஆமா சார். லைட்ட ஆப் செய்ய மறந்துட்டேன்... சொன்னதுக்கு நன்றி சார்.” 'நன்றி வேணாம். அபராதந்தான் வேணும். ஆமா உன் பெயரென்ன?” "தெரியாமத்தான் கேக்ன்ே. லைட்டால கண்ணு கூசி அதினால எதிர் வண்டிங்களுக்கு, இடைஞ்சல் வரக் கூடாதுன்னுதான், அரசாங்கத்துல இப்படி ஒரு கண்டிஷனக் கொண்டு வந்திருக்காங்க. இப்போ பட்டப்பகலு. சூரியன் வேற கடுது. அந்த லைட்டு எப்படிசார் கண்ணக்கூச வைக்கும்?” "கூடக்கூடவா பேசுறே. சரி உன் பேரென்ன? எது பேசணுமுன்னாலும் கோர்ட்ல வந்து பேக.” "சார். சார். எனக்கு யாருமில்ல சார். இன்னும் நான் வேலையில பெர்மனன்ட் ஆகலை சார். புதுசா கல்யாணம் ஆனவன்சார்” - "உன்னைப் பார்க்க பாவமாத்தான் இருக்கு. அதோ முன்னால இருக்கான் பாரு பொதிமாடு மாதிரி. அந்த ஆசாமிய இங்கவரச்சொல்லு. உன்ன இந்தத் தடவ மன்னிச்சிடணுமுன்னு என்கிட்டச் சொல்லச் சொல்லு.” - வெள்ளை போலீஸ் கையில் வைத்திருந்த பெரிய ரசீது புத்தகத்தைத் திறந்து அதன் மத்தியிலிருந்தபென்சிலை பாதிவரை துாக்கி, வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தது. டிரைவர் கந்தன், அலறியடித்து ஜீப் பக்கம் ஓடினான். ஒர இருக்காரைக்காரர் ஒய்யாரமாகக் கேட்டார். "என்னையா தலையைச் சொறியரே?” 'அய்யா அங்கே வந்து என்னை விட்டுவிடும்படியா போலீஸ்காரர்கிட்ட சொன்னால், அவருவிட்டு விடுவாராம்ஸார்.”