பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 73 "என்னய்யா நினைச்கக்கிட்டான் அவன்? நான் கெஜட்டட் ஆபீஸர். அவன் கண்டைக்காய் டிராபிக் சார்ஜண்ட். நான் போய் அவன்கிட்ட கெஞ்சனுமா? போப்போ.நீயுமாச்சு. அவனுமாச்சு.” அவரை நம்ம முடியாததுபோல் பார்த்த கந்தன். சாட்சிக்காரனைவிட சண்டைக்காரன் தேவலை என்பதுபோல், அந்த சாலையின் மறுமுனைக்குச் சென்று வெள்ளை யூனிபாரத்தின் முன்னால் தலையைச் சொறிந்தான். அவரோ, அவன் பேசப் பேச கேஸ் புக்காகவும், கேஷ் புக்காகவும் பயன்படும் அந்த சார் வீட் புத்தகத்தைத் திறந்து அவனைப் பற்றிய புதுக்கவிதை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். கந்தன், அவர் மோவாயைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். "சார். சார். நான் இன்னும் பெர்மனன்ட் ஆகலை சார். கோர்ட்ல ஏதாவது ரிமார்க் வந்தா அம்போன்னு ஆயிடுவேன். érFrí...** "அதோ இருக்காரே உங்க ஆபீசரு. அவன்கிட்ட சொல்லு. அவனால உன்னை காப்பாத்த முடியுமான்னு பார்த்துடலாம். இந்தா பிடி.” பழைய காலத்து முனிவர் போல், போலீஸ்காரர் கொடுத்த அந்த சாபக் காகிதத்தை, கந்தன் வாங்கிக் கொண்டு, சிறிது நேரம் நின்றான். பிறகு ஜீப் நின்ற பக்கம் வந்தான். அதில் ஏறிக் கொண்டான். எரிந்து கொண்டிருந்த லைட்டை 'ஆப்' செய்யவில்லை. ஜீப்பை விட்டான். "அடப்போய்யா. லைட்டு. பொல்லாத லைட்டு இந்த நாட்ல பகலே இருட்டாகுது.” ஒரக்காரர் உபதேசித்தார். "ஒன் டூட்டியை நீதான் சரியாச் செய்யனும். அப்படிச் செய்திருந்தால் இப்டி மாட்டிக்க வேண்டாம் பாரு. சரி. சரி. ஜீப்பை பார்த்து ஒட்டு.”