பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. க. சமுத்திரம் ஜீப்பின் பின்னிருக்கையில் கிடந்த ஜூனியர் உதவியாளர்களில், ஒருத்தர் ஒட்டகங் சிவிங்கி மாதிரி தன் முகத்தை கெஜட்டட் அதிகாரிகளின் தலைகளுக்கு மத்தியில் நீட்டிக் கொண்டே, போலீஸ்காரருக்கு கந்தன்மேல் கருணை படாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லாமல் சொன்னார். "அந்த டிராபிக் போலீஸ்காரர். நம்ம ஆபீசுக்கு முந்தாநாள் வந்திருந்ததார். ஏதோ ஒரு சலுகை கேட்டுவந்தப்போ, நீங்க அவர உட்காரக்கூடச் சொல்லலையாம். எங்கிட்ட வந்து எனக்கும் காலம் வரும் கவனிச்சுக்கிறேன்’னு முனங்கிக்கிட்டே போனார்.” "கெஜடட் ஆபீஸர் நான். ஆப்டர் ஆல் அவன் ஒரு நான்-கெஜட்டட் சார்ஜண்ட். எப்படியா உட்கார சொல்ல முடியும்? எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? யோவ்! வண்டியை ஸ்பீடா ஒட்டேன்யா.” டிரைவர் கந்தன், கோர்ட்டில் வாங்கப்போகும் ரிமார்க்கைப் பற்றியே நினைத்ததால், ஜீப்பை ரிமார்க்கபிளாக ஒட்ட முடியவில்லைதான். ஆனாலும், அவன் ஒரு தொழில் விகவாசி. அப்படிப் பட்டவர்களுக்கு எத்தகைய சிரமங்களும் தூசாகத் தெரியுமே அப்படிப்பட்ட துாசை துடைத்த தோரணையில் சிந்தனை வாதையிலிருந்து விடுபட்டு, ஜீப்பை ஏவினான். அந்த ஜீப், கடலில் கப்பல் மிதப்பதுபோல் சென்றது. முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலையில் பாய்ந்து, அங்கிருந்து கப்பிச்சாலைக்குப் பிரிந்து, பிறகு ஒரு மண்சாலை வழியாக ஒடியது. ஒருமணி நேர ஓட்டத்திற்குப் பிறகு, மண் பாதையில் நடப்பதுபோல் நின்று, பிறகு மடமடவென்று பாய்ந்தது. அந்தச் சமயம் பார்த்து நம்ப முடியாமல் பேய்மழை நானிருக்கிறேன்' என்பது மாதிரி தரையில் இறங்கியது. மண்பாதையோ, உடனே ஜீப்பை தனக்குள் இறக்கியது. போதாக்குறைக்கு, ஜீப் மக்கர். கந்தன் எஞ்சினை ஏற்றிவிட்டு கீழே குதித்தான். ஜீப்பின்