பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 75 மோவாய் மாதிரியிருந்த பானெட்டைத் திறந்து, உள்ளேயிருந்த அதன் இயந்திரப் பற்களை அங்குமிங்குமாக ஆட்டினான். முன்னிருக்கைக் கெஜட்டட் அதிகாரிகள் முணுமுணுத்தார்கள். ஆனாலும் அவனை அரட்டவில்லை. காரணம், நான்கு நாட்களுக்கு முன்பே, வண்டிக்கு நோய் வந்திருக்கிற விவகாரத்தை இந்தக் கந்தன் அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் கண்டுக்கவில்லை. கந்தன், சளைக்கவில்லை. டிரைவர் இருக்கையில் இருந்த ஒரு கத்தை ஸ்பேனர்களை எடுத்து ஜீப்பிற்கு வைத்தியம் செய்தான். அரைமணிநேர ஆப்ரேசனை கொட்டு மழையில் செம்மையாய்ச் செய்துவிட்டு இருக்கையில் ஏறிய கந்தன், வண்டி நகரத் துவங்கியதும் அனைவரையும் பெருமிதமாகப் பார்த்தான். ஆனால், உடலெங்கும் பாண்ட்டும் சட்டையும் அவன் உடம்பில் கோந்து மாதிரி ஒட்டிவிட்டது. தலையிலிருந்து மழைத்துளிகள் தோளில் சொட்டின. அந்த மழையின் வேகத்தைப் போலவே, ஜீப்பும் பறந்தது. கல்லும் மண்ணும் கலந்த யூனியன் சாலையில் தக்காரும் மிக்காரும் இல்லாமல் ஓடியது. பிறகு ஒரு கண்மாய்க்கு அருகே நின்றது. அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஓடி, ஒரு கசிவு நீர்க்குட்டையின் பக்கம் கரையை உராய்ந்தபடி குந்தியது. பிறகு ஒரு பத்துக்கிலோ மீட்டர் ஒட்டம். ஆனால் அதற்கு மேல் போக முடியாதபடி, ஒரு சின்னப் பாலம் உடைந்து, தண்ணிர் வெள்ளம் அந்த உடைப்புகளின் இடுக்குகளின் வழியாகப் பாய்ந்தது. ஒரு கிளை பாதை வழியாகப் போகலாம் என்றால், அதன் குறுக்கே ஒரு காட்டு வாகை மரம் விழுந்து கிடந்தது. வேறு வழியில்லாமல், அந்த ஜீப் வந்த வழியில் திரும்பியது. ஜீப்பில் 'வைப்பர் வேறு அவுட், ஆனாலும் கந்தன், தனது கைக்குட்டையால் அதைத் துடைத்துத் துடைத்து வழிதேடி ஒடினான். அந்த கெஜட்டட் அதிகாரிகளுக்கும், ஒரே பசி.வெள்ளத்