பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 க. சமுத்திரம் சேதத்ப்ை பார்வையிட வந்த அவர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தனது அலுவலகத்தில் மட்டன், சிக்கன், வடை, பாயாசம் ஆகியவற்றுடன் காத்துக் கொண்டிருப்பார். ஆனால், பாழும் பாலம் எந்த நேரத்தில் கீழே விழுந்ததோ அவர்கள் வயிற்றை அடித்துவிட்டது. இப்போது நடுபக்க கெஜட்டட் ஆணையிட்டது. “கந்தா வழில ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து ஜீப்ப நிறுத்து" கந்தனுக்கும் பசி. காலையில் சாப்பிடவில்லை. அவன் புறப்படும்போது பிள்ளைத்தாய்ச்சி மனைவி கத்தினாள். "இப்படி ராவும் பகலும் வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகும்?” என்று கேட்டாள். அவனும், இப்படித்தான் ஆகும் என்பதுபோல் திருப்பிக் கத்தினான். அவள் கொடுத்த இட்டலியை உடனடியாக உட்கொள்வது, அவனுக்கு நாகரீகமாகத் தோன்றாததால், வெளியேறிவிட்டான். இப்போது, கொட்டும் மழை. நேற்றைய மழையிலேயே அவனது வீட்டுத்தரை, மனைவியின் வயிறு மாதிரி உப்பியது. இப்போது எப்படி இருக்குதோ. இருக்காளோ. அந்த ஜீப், ஒரு சாதாரண டவுன் வழியாக அங்குமிங்கும் ஆடியாடி போனது. பல ஹோட்டல்களை கழித்து விட்டும், கடந்துவிட்டும், ஒரு முனியாண்டியின் முன்னால் அதற்குக் கட்டுப்பட்டு நிற்பதுபோல் நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். அவசர அவசரமாய் ஒட்டலுக்கும் புகுந்தார்கள். ஒரே கூட்டம். சாப்பிடுகிற ஒவ்வொரு ஜீவராசிக்கும் அருகே, இன்னொருத்தர் நின்று கொண்டிருந்தார். அப்படியும் எவரும் இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக சாப்பாட்டு டோக்கன் காகிதங்களை எச்சில் டேபில்களில் ஒட்டி வைத்திருந்தார்கள். அதோடு சாப்பிட்டு முடிந்தவர்களோ, நாற்காலிகளை விட்டு நகராமல் ஜம்மென்று இருந்தார்கள். எவன் வெளிலபோய். மழையில நனைவான்? டிரைவர் கந்தன், கல்லாவில் இருந்தவரின் காதைக் கடித்தான்.