பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 77 அதிகாரிகளைச் சுட்டிக் காட்டி, அவர்கள் எப்பேர்பட்டவர்கள் என்று விளக்கினான். உடனே கல்லாக்காரர், சாப்பிடுபவர்களின் கைகள் கீழே போகும்போது அவர்களது வாழை இலைகளையும், மேலே போகும்போது அவர்களது வாய்களையும் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளின் முன்னால் போய் சல்யூட் அடித்தார். பிறகு அவர்களை பேமிலி ரூமிற்குள் கூட்டிப்போய், அங்கே பீடா போட்டுக் கொண்டிருந்த இருவரை தூரத்திவிட்டு, உட்கார வைத்தார். ஒரே ஒரு மேஜை. நான்கு நாற்காலிகளில் இரண்டில் வேகன்சி. கெஜட்டட் அதிகாரிகள் அதில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்தார்கள். ஜூனியர் அசிஸ்டெண்ட்கள் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டார்கள். கந்தனுக்குத்தான் இடமில்லை. அவன் காத்திருந்தான். இடமிருக்கிறதா என்று எல்லா இடங்களையும் கண்ணால் நோண்டினான். காலி இல்லை. கந்தன்வயிற்றைப்பிடித்துக்கொண்டும்,பிள்ளைத்தாய்ச்சிப் பெண்டாட்டியை நினைத்துக்கொண்டும்பசிப்பிரசவவேதனையில் அல்லாடினான். இதற்குள் புரமோட்டி கெஜட்டட் அதிகாரியின் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து கோழி பிரியாணி சாப்பிட்ட ஒருவர் எழுந்துவிட்டார்.ஆசாமிக்கு குமட்டல்.கந்தன்டபக்கென்று அதில் உட்கார்ந்தான். மியூசிக்கல் சேர் போட்டியில் உட்காருவார்களே அப்படி. புரமோட்டி கெஜட்டட் ஆபீஸருக்கு வாயில் கடித்துக் கொண்டிருந்த கோழித்துண்டுக்கு மேல் கோபம் கொப்பளித்தது. கெஜட்டட் ஆபீஸருக்கு இணையாக எப்படி உட்காரலாம்? இன்டிசிப்பிளின். வாய்க்குள் இருந்த கோழிக்கறி வெளியே நாக்குமாதிரி துருத்தும்படி, கண்டிப்பாகச் சொன்னார். 'இந்தாப்பா. உனக்கு வேற பக்கத்தில இடம் கிடைக்கலையா?” இதுவரை டிரைவரிடம் அதிகமாகப் பேசாத நேரடி நியமனமும், அவனுக்கு அறிவுரை சொன்னது.