பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 க. சமுத்திரம் "வேற பக்கமா போய் உட்காரேன்.” கால் வலித்த கந்தன், இப்போது மனம் வலித்து எழுந்தான். இதற்குள் அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஜூனியர் அஸிஸ்டென்ட்கள் தத்தம் இருக்கையில் இருந்து எழுந்து இரண்டு மொட்டை நாற்காலிகளை ஒரே இருக்கையாக்கி அவனை தங்கள் பக்கம் வரும்படி கையசைத்தார்கள். அவனுக்கு இடஒதுக்கீட எதிர்மறையால் செய்துவிட்டு, எஞ்சிய இடங்களில் உட்கார்ந்தார்கள். கந்தன் அவர்களைப்பார்த்துத் தலையாட்டினான்.பிறகு தலையைத் தொங்கப்பொட்டுக்கொண்டேவெளியேறினான்.அவனுள் எழுந்த சீற்றமோ, சிறுமையோ ஏதோ ஒன்று அவன் பசியைப் புசித்துவிட்டது. வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவதற்குப் பதிலாக வயிற்றுச் சேதத்தை ஈடுகட்டிய கெஜட்டட் அதிகரிகள், பீடாவைக் குதப்பிக் கொண்டே வெளியே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து கீழே குதிக்கும் கந்தன் ஜீப்பில் அசையாமல் இருப்பதைப் பார்த்தவிட்டு ஆச்சரியப்பட்ட புரமோட்டி ஆபீஸர் அவனுக்கு பாராட்டுத் தெரிவித்தார். "கெட்டிக்காரன்யா நீ. இதுக்குள்ள சாப்பிட்டுட்டியே. நாராயணா.ஏறேம்பா...” "ஒரு சேஞ்சுக்கு இப்போ நீங்க உட்காருங்களேன்." நடுப்பக்கத்து நேரடி நியமன நாராயணன் ஒரங்கட்டி நின்றபோது, ஒரங்கட்டி நின்றவர் சிறிது யோசித்துவிட்டு பின்னர் ஜீப்பில் ஏறி நடுப்பக்கம் உட்கார்ந்தார். அவர் ஒரத்திற்கு வந்துவிடக் கூடாதே என்பதுபோல் அடுத்தவரும் உடனடியாய் ஏறினார். “கந்தன் சாவியை போட்டு ஜீப்பை உருமவிட்டான். ஆனால், அது உருமி உருமி மீண்டும் நிசப்தம் ஆனது. சங்கலிக் கோர்வையாய் சப்தமிடவில்லை. உடனே, கந்தன், கீழே குதித்து