பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஒதுக்கீடு 79 பேனட்டை திறந்து எஞ்சின் தலையில் தட்டினான். அதிகாரிகள் அவனை பொருள்பட பார்த்த போது, இவன், ஒரு அலட்சிய பார்வையை வீசியபடியே, மீண்டும் இருக்கையில் குதித்தான். சாவியை திருப்பினான், இப்போது லேசான உருமல்கூட கேட்கவில்லை. கந்தன் சிறிது அதிகார தோரணையிலே ஆணையிட்டான். 'சார்வண்டியிலடைனமோ கோளாறு.தள்ளி விட்டாத்தான் அந்த இரண்டு அதிகாரிகளும் எஞ்சி உள்ள அலுவலர்களும் கீழே இறங்கி, ஜீப்பை தள்ளோ தள்ளு என்று தள்ளுகிறார்கள். கந்தன், பல்லக்கில் உட்கார்ந்து இருப்பதுபோல் கம்மாவே இருந்தான். இனிமேல் தான் ஜீப்பிற்குள் சாவியை திருப்ப வேண்டும். கந்தன், சாவியைத் திருப்பியபடியே, அருகே உட்கார்ந்த புரமோட்டி அதிகாரியிடம் காதைக் கடிக்காமல், ஜிப்புக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, வழிப்போக்கர்களுக்கும் கேட்கும்படிவிவரம்சொன்னான்.பணிவுக்குரலில்தான் பேசினான். அதேசமயம், பின்புறம் திரும்பி, சாட்சிகளை வைத்துக் கொண்டு பேசுவதுபோல் பேசினான். "சார்! நாளைக்கு நீங்க கேட்டது மாதிரி ஒங்க வீட்டுக்கு வரமுடியாது சார். அம்மாகோயிலுக்கு போறதுக்கு வேற ஏற்பாடு செய்துக்கலாம். இனிமேல், அபிசியலாத்தான் ஜீப்போ காரோ ஒட்டுவேன். இல்லாட்டி, நானும் மாட்டிகுவேன் பாருங்க.." 6)вфобит - 1992 ©