பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிராக்டர் தரிசனம் “எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது. எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது. இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம். ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் காயப்போடாதேன்னு சொன்னேனே. கேட்டியா..? கேட்டியா..?” வயலின் வரப்போரத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி தந்தை மருதமுத்து சொன்னது, மகன் கணபதியா பிள்ளையின் காதில்,"கெட்டியா.கெட்டியா..."என்றேதான்கேட்டது.தந்தையைச் 'சத்தம் போடப் போனார். இயலவில்லை. அவர் முகத்தைப் பார்க்கக் கூச்சப்பட்டு, வயலின் ஓர் ஒரத்தில் கல்லடுப்பில் பொங்கிய பாத்திரத்தைப் பார்த்தார். அதில் கோழித் துண்டுகள் குதித்துக் கொண்டிருந்தன. வேலைக்காரப்பெண் ராசகிளி, தீ மூட்டிக் குழாய் மூலம் ஊதி, அடுப்பை மூட்டிவிட்டு, “கறி வெந்திருக்கா” என்று பார்ப்பதற்காக, ஒரு கோழித் துண்டை வாய்க்குள், திணித்துவிட்டு, பிறகு சூடு தாங்காமல் துப்பினாள். "கடைசியில் எவனெவனுக்கெல்லாமோ நான்.” என்று பேசிய அவர் மனைவி மரகதம், பிறகு அந்தப் பேச்சை முடிக்க வில்லையானால், அது ஆபத்தான அர்த்தத்தில் கொண்டு போய்விடும் என்று உணர்ந்து "சோறாக்க வேண்டியதிருக்கு” என்றாள். கணவனைக் கடுகடுப்பாகப் பார்த்தாள். அந்தப் பார்வை தாங்க மாட்டாத கணபதியா பிள்ளை, தமது வயலைக் கண்களால் உற்றுப் பார்த்தார்.