பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிராக்டர் தரிசனம் 8, எல்லா வயல்களும் நெற்பயிர்களால் அலங்காரமாய்த் தோன்றியபோது, இந்த வயல் மட்டும் மொட்டையாய், மூளியாய்க் கிடந்தது.வயலைப்பார்க்கமனமில்லாத கணபதி,கண்களை நகர்த்தி, தெற்குப் பக்கமாய்ப் பார்த்தார். ராமையாத் தேவரோட வயல். மற்ற வயல்களைவிட அதில் மட்டும் நெற்பயிர்கள் ஒரடி அதிகமாக வளர்ந்திருந்தன. இவ்வளவுக்கும் அடுத்த வயல்களில் நட்டபோது தான் தேவர் வயலிலும் நடப்பட்டது. ஆனால் தேவர் வயலில், அவரைப் போலவே பயிர்கள் மினுக்காக நின்றன. ராமையாத் தேவர், கணபதியா பிள்ளையைப் பார்த்து, மீசையைத் தடவி விட்டார். கையில் இருந்த டிரான்ஸிஸ்டர் ரேடியோவைத் தட்டி விட்டார். சிறுமைப்பட்டுப் போன கணபதியா பிள்ளை, கிழக்குப்பக்கவயலைப்பார்த்தார். அங்கே, ஆறுமுகநாடார், லாவகமாகப் பூச்சி மருந்தை வீசிக் கொண்டிருந்தார். பிள்ளையை அவர்பார்த்தவிதம், அவரையும் சேர்த்துவீசப்போவதுபோலிருந்தது. எவரையும், எதையும் பார்க்க முடியாமல் தவித்த கணபதி, பண்ணையாள், பால் பாண்டியனைக் கோபமாகப் பார்த்தார். ‘எல்லாம் இவனால்தான் வினை. நான்கு முனைத் தேர்தல் போட்டியில் ஒரு முனையாவது டிக்கெட் வாங்கி விடலாம் என்று அலைந்து, அவர் ஏர்முனையை மறந்து, வயலை டிபாஸிட் இழந்த வேட்பாளர் நிலையில் விட்டது உண்மைதான். ஆனாலும், நேற்று வாடகை உழவுக்கு ஆள் அமர்த்தப் போனார். இந்தப் பால்யாண்டிதான், "உழவு மாடுங்க ஒரு வாரம் எடுத்துக்கிடும். டிராக்டரை வாடகைக்கு வாங்கலாம்..” என்று சொல்லிவிட்டான். பெரிய பண்ணையாளிடம் வருடக்கணக்கில் வேலை பார்த்தவனாச்சே என்று நம்பி விட்டார். இவ்வளவுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னால்தான்பால்யாண்டி இவரிடம்வேலையாளாய்ச்சேர்ந்தான். இப்போது இவரையே வேலையாளாய் ஆக்கிவிட்டான் என்பது கிழவர் மருதமுத்துவின் வாதம்.