பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 க. சமுத்திரம் கணபதியா பிள்ளை, அழப் போனார். டிராக்டருக்குப் பணம் கட்டியாகி விட்டது. எட்டு மணிக்கு வரவேண்டியது. பத்து மணியாகியும் வரவில்லை. இருசால் உழவு செய்யனும், மத்தியானமே"தொளி" மிதிக்கணும். அதாவது உழுத நிலத்தில் இலை தழைகளைப் போட்டு கால்களால் மிதிக்க வேண்டும். அதோ கிணற்று மேட்டில் வாதமடக்கிப் பூவரசுக் கிளைகள் குவிந்து கிடக்கின்றன. வேலையாட்களுக்கும் சொல்லி யாச்சு. டிராக்டரைத்தான் காணோம். வருமா..? ஒரு காலத்தில் வயலெல்லாம் வியாபித்து, இப்போது ஒரங்கட்டப்பட்ட ஐ.ஆர். எட்டு நெல் ரகம் போல் கழித்துக் கட்டப்பட்ட தந்தைக்கார மருதமுத்து, இப்போது ஆட்டம் போடும், ஐ.ஆர். இருபதை - அதுதான் பண்ணையாள் பால்யாண்டியனை எரிந்து விழுந்து பேசினார். 'எல்லாம் உன்னால் வந்ததுடா... ஒன்னால்தான் வந்ததுடா." "ஆமாம். என்னாலதான் வந்தது. அதோ பாருங்க." எல்லோரும் பால்.பாண்டியன் காட்டிய திசையைப் பார்த்தார்கள். சந்தேகமில்லை. டிராக்டர். ராட்சதச் சிகப்பு கம்பளிப்பூச்சி போல், அது ஒடி வந்தது. அதன் அரியாசனத்தில், ஒரு வாட்டசாட்டமான ஆசாமி. அடடே... என்ன இது... ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும் ஒடிப்போய் டிராக்டரை மறிக்கிறாங்க..? என்ன அநியாயம். டேய் பால்யாண்டி... அரிவாளை எடுடா...' கணபதியா பிள்ளை, வேட்டியை முந்தானை மாதிரி துாக்கிக் கட்டிக்கொண்டு, டிராக்டர் மறிக்கப்பட்ட இடத்தைப் பார்த்து ஒடினார். அவர் பின்னால், பால்யாண்டி அரிவாளுடன் ஓடினான். டிராக்டர் முன்னால் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ராமையாத் தேவரும், ஆறுமுக நாடாரும், டிராக்டர்