பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிராக்டர் தரிசனம் 83 அரியாசனத்தில் இருந்த டிரைவரையும், அவன் பின்னிருக்கையில் கட்டப்பட்ட கம்பத்தில் பறந்த ஒரு கட்சியின் கொடியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். ராமையா தேவர், கொடியைப் பார்த்தபோது, ஆறுமுகம் நாடார் குரல் கொடுத்தார். "நிலம் பூமாதேவிடா. எல்லாருக்கும் பொது மனுஷிடா. வயலுக்குள்ள எப்படிடா நீகட்சிக் கொடியோடு வரலாம்? ஒண்ணு கொடியை எடுத்துக் கீழே போடு. இல்லேன்னா வந்த வழியா வண்டியை விடு. வயலுக்குள்ளே மட்டும் இறங்கப்படாது.” "வண்டியை ரிவர்ஸில் எடுக்க முடியாதே.” "அப்போ கொடியை எடு. எடுக்கியா..? எடுக்கட்டுமா..? கணபதியா பிள்ளையால் தாள முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் கொடியைவிட, தமதுவயல் தரிசாகக் கிடக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம் என்று நினைத்தார். சூடாகவே கேட்டார். 'என்னய்யா நீங்க... இந்தக் கொடில என்னய்யா இருக்குது..?” "ஆயிரம் இருக்குதுய்யா. டிராக்டர, வயலுக்குள்ளே துாரத்துப் பார்வையா பார்க்கிறவன், ஒம்ம வயலுல பறக்குதா. என் வயலுல பறக்குதான்னு சந்தேகப்படுவான்.” "அப்போ அடுத்த கட்சிக்காரன் கிட்டப்பணம் வாங்கிட்டீரா.” "யோவ் பிள்ளை... இந்த மாதிரி பேச்சை யார்கிட்டே வச்சுக்கிட்டாலும், என்கிட்டே வச்சுக்காதேயும். ஏய் பால்யாண்டி கையில் என்னதுடா. போட்டுப் பார்ப்போமா...? நீ அரிவாக் கையோடயும், நான் வெறுங் கையோடயும் மோதிப் பார்ப்போமா.” 'அய்யோ சாமி. இதோ ஒங்ககிட்டேயே கொடுக்கேன். நீங்களே என்னை வெட்டுங்க...” 7