பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

                க. சமுத்திரம்


    “சரி கொடு. கணபதியா பிள்ளைக்கும் டிரைவருக்கும் தேவைப்படும்.படுவாப் பயலே கொடுடா.... அரிவாளை...." 
    பால்யாண்டி, அரிவாளை விடவும் முடியாமல், தொடவும் முடியாமல் தவித்தபோது விவசாயப் பிரமுகர்கள் விவகாரத்தைத் தீர்த்துவைத்தார்கள்.சம்பந்தப்பட்டஅந்தக்கட்சியின்கொடி,நேராக நிறுத்தப்படாமல், டிராக்டர் மேல் படுக்க வைக்கப்படவேண்டும் என்பது தீர்ப்பு.
    எப்படியோ... டிராக்டர், கணபதியா பிள்ளையின் வயலுக்குள் வந்தது. டிராக்டரின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்ட அரியாசன டிரைவர், படுத்துக் கிடந்த கட்சிக் கொடியைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, அந்த வயலைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது, பால்யாண்டி, டிராக்டரில் தனக்குள்ள நிபுணத்துவத்தைக் கோடி காட்ட விரும்பினான். அதட்டலாகவே கேட்டான்.
    "டிரைவர். கேஜ் வீல் இருக்குதா...? வயலுல சேறும் அடிச்சுடலாம் பாருங்க..."
     டிரைவர்பால்யாண்டியைப்பட்டும்படாமலும் பார்த்தபோது, கணபதியா பிள்ளை, தமது வேலையாளிடம் விளக்கம் கேட்டார்.
    "அதென்னப்பா புது வீலு..?”
 "சொல்லுதேன்.மொதலாளிசொல்லுதேன்.இந்தடயர்ச்சக்கரங்கள் வச்சுச் சேறு அடிக்க முடியாது. அப்படி அடிச்சா டிரைவரோட சேர்த்து, இந்த டிராக்டர் முங்கிப் போகும். இந்தச் சக்கரங்களில் எதைஇடதுபக்கம்மாட்டனும்,எதைவலதுபக்கம்மாட்டணுமுன்னுஇருக்கும்.மாற்றிபோட்டால்மாட்டிக்கிடுவோம். டிரைவர்!நீங்கசட்டிக்கலப்பையைப்பொருத்திஇருக்கணும்.இந்த ஏர்க் கலப்பை, இந்த வயலுக்கு லாயக்குப்படாது. சரியா உழாது."
       பாம்புக் காது மருதமுத்துக் கிழவர் கத்தினார்.