பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிராக்டர் தரிசனம் 85 "டேய் என்னடா சொல்றே. ஆழ உழாடால், தொளி அடிக்க முடியாதேடா.”

"கவலைப்படாதிய மொதலாளி. நான் எதுக்கு இருக்கேன்: "அதுதாண்டா புரியல.” டிரைவர், இன்னும் வண்டியை நகர்த்தவில்லை. அவரைப் பதறிப் பார்த்த கணபதியா பிள்ளையிடம் அட்டகாசமாகக் கேட்டார். "இது எவ்வளவு ஏக்கர்.?” 'ரெண்டு ஏக்கர். ஏன் அப்படி கேட்கறிக..." 'ஏய்யா... மூணு ஏக்கர் நிலத்தை ரெண்டு ஏக்கர்னு ‘எங்கய்யா கிட்டச் சொல்லி, 240 ரூபாய் கட்டினால் போதுமா? ஒரு ஏக்கருக்கு மேல்கொண்டு ரூ.120 கட்டணும்.” 'ரெண்டே ரெண்டு ஏக்கர்தான் ஸாரே. வேணுமுன்னால் பத்திரத்தைக் காட்டட்டுமா...” "இதோ பாரும் பிள்ளை... எங்கய்யா'வை ஏமாற்றியது மாதிரி என்னை ஏமாத்த முடியாது. எங்கய்யாவை ஏமாத்தும். ஆனால், என்னை ஏமர்த்தாதீங்க.." கணபதியா பிள்ளைக்குக் குழப்பம் வந்தது. ஆனால் பால்யாண்டி, டிரைவர் கடைசியாய்க்கக்கிப் போட்ட 'பஞ்சதந்திர' வார்த்தைகளில் சூட்சுமம் இருப்பதைப் புரிந்து கொண்டு தீர்மானித்தான். 'சரிண்ணே... 120 ரூபாய்ல ஒனக்குப் பாதி. எங்க முதலாளிக்குப் பாதி. சரி தானே.” "ஒன் முகத்துக்காவ விக்கக்கmேன். சரி காசைக் கட்டச் சொல்லு.”