பக்கம்:தரும தீபிகை 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 == த ரு ம தீ பி ைக.

மானத்தைக் கைவிட்டு நான் இாந்து வாழேன் என அப் பெருன் தகை உாைத்துள்ள இதனே ஈண்டு உணர்ந்து சிங்திக்க வேண்டும்.

உயர்ந்த மானத்தை அழித்து, நல்ல மதிப்பைக் கெடுத்து, உயிர் இருந்தும் செத்த பிணமாக மனிதனை யாசகம் சேப்படுத்தி விடுதலால் இரந்தான் இறந்தான் என நேர்ந்தான். மாய்ந்தவர். மாய்ந்தவர் அல்லர்கள்: ம்ாயாது ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்! - வீங்தவர் என்பவர் வீங்தவ ரேனும் சக்தவர் அல்லது இருந்தவர் யாரே (இராமா, வேள்வி, 30)

உயிருடையாாயினும் கை எந்தி யாசித்தவர் செக்தவரே; உடல் மறைந்து இ ற க் து போயினும் கொடையாளிகளான வள்ளல்கள் என்றும் இறவாமல் உள்ளவரே என உணர்க்கி யிருக்கும் இதன் கருத்தையும் வேகத்தையும் தனித்து கோக்குக.

இாவால் பழி இழிவுகளும், ஈகையால் புகழ் உயர்வுகளும் உளவாகின்றன. கொடிய பழியில் விழுந்து அழியாமல் இனிய வழியில் ஒழுகி மனிதன் புனிதமாக வாழ வேண்டும்.

யாசகம் மானத்தை அழித்து விடுதலால் அக்க ஈனத்தைக் தொடாதே. உயிரினும் இனிய அதனை உரிமையுடன் பேணுவதே உணர்வின் பயனும். மானம் அழிய நேரின் மாண்டுபோ என்றது செத்தாலும் யாசகத்தைத் தீண்டாதே என வேண்டியவாரும்.

பொல்லா வறுமை புகினும் இரவின்கண் செல்லாதான் சீமானே யாகுவான்-எல்லாம் உடையன் எனினும் உதவான் இழிந்து கடையனே யாவன் கழிந்து. எவ் வகையும் இாவாதவன் செல்வச் சீமானே என்றது அவனது சீர்மை தெரிய வந்தது. ஈயாகான் இழித்தான்; இாவா தான் உயர்ந்தான். விதி விலக்குகளை உணர்ந்து கதி க்லம் காண்க.

படுதுயர மான பழியிரவில் வீழல் அடுகரக மாகும் அது. என்பதை கெடிது சிந்தித்து நெறியுடன் வாழ்க.

ബ** l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/387&oldid=1324964" இலிருந்து மீள்விக்கப்பட்டது