பக்கம்:தரும தீபிகை 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

940 த ரும தி பி ைக தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. (குறள், 613) உபகாரம் செய்தல் என்னும்உயர்ந்த மேம்பாடு முயற்சியின் கண்னேயே தங்கியுள்ளது எனத் தேவர் இங்ானம் அருளி யிருக்கிருர், செயலுடையவர் உயர்கல மடைகின்ருர். தாளா ண்மை=முயற்சி. வேளாண்மை= உபகாரம். கருங்கடல் கடத்தும், அருஞ்சாம் புகுத்தும், மலை வனங்கள் தாண்டியும், மறுபுலங்கள் அடைந்து மூண்டு முயன்று பொருள் திரட்டி மீண்டு வருதலால் முயற்சி தாளாண்மை என வக்தது. மனிதன் கால் ஒடிச் செய்வது என்னும் குறிப்பில் இது வக்கிருக் ன்ெறது. குறிக் கோளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. கால் இல்லாதவன் முடமாய் மடிந்து கிடக்கின்ருன். தாள் இல்லை ஆயின் ஆளும் இல்லையாய் அவலம் அடைகின்ருன். "தாள் உளாள் தாமரையினுள்.” (குறள் 617) முயற்சியின் உள்ளேயே இலட்சுமி வசித்திருக்கிருள் என நாயனர் குறித்திருக்கும் இந்த அழகைக் கூர்க்க பார்க்க. தாள்=முயற்சி. காளாளன் மேலாளய்ை மிளிர்ன்ெருன். திருமகள் மனம் உவக்து வாழும் இனிய கிலேயம் என முயற் சியைக் குறித்தது எல்லாச் செல்வங்களையும் அது கல்ெ வருதல் கருதி. திருவின் திருமகய்ை வினே யாளன் மருவி ஒளிர்கிருன். கடந்தவன் காலில் சீதேவி, கிடந்தவன் காலில் மூதேவி என்னும் பழமொழி முயற்சியாளன.த உயர்வையும், சோம்பேறி பின் இழிவையும் தெளிவாக விளக்கி கிற்கின்றது. பொருள்களே நீட்டி, இன்பங்களை ஊட்டி, புகழ்களே ஆட்டி, புண்ணியங்களைக் காட்டி மன்பதையை மாண்புமத்தி வருதலால் தொழில் விழுமிய மகிமை நிலையமாய்க் கெழுமியுள்ளது. திருவின் கருவூலமாய் இங்கனம் மருவியிருக்கலால் சொ ழிலை யாவரும் ஆவலோடு மேவி வருகின்றனர். வினையின் அளவே வியனும் பயனும், தாம்செய்கின்ற கருமங்களுக்குக் கக்கபடியே மேன்மையும் செல்வமும் மனிதர்க்கு உளவா கின்றன. பழி பாவங்கள் கலவாத தொழில்கள் என்றும் விழுமிய கிலையில் விளங்கி கிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/169&oldid=1325923" இலிருந்து மீள்விக்கப்பட்டது