பக்கம்:தரும தீபிகை 3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. மற தி. 999 மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோவில்கள், வாவி கள் முதலாக இவ்வுலகில் காணப் படுகின்ற விழுமிய நிலைகள் எல் லாம் மனிதனுடைய கினேவின் விளைவுகளாகவே வெளியே தோன்றி ஒளி விசியுள்ளன. மானச சிருட்டிகளை கோக்கி வானகமும் வியந்து கிற்கின் றது. அகத்தின் எண்ணங்கள் புறத்தே எண்ணரிய வண்ணங்க ளாய் எதிரெழுந்து திகழ்கின்றன. கிண்வின் கூட்டங்கள் வாழ்வின் நீரோட்டங்களாய்ப் பெருகி வருகின்றன. எண்ணம் வறண்டால் எல்லாம் வறண்டு போகின்றன; போகவே வாழ்வு பாழாய்ச் சூனியமடைகின்றது. இனிய கினேவுகள் அரிய காமதேனுக்களாய் இன்பம் சாக்த ருளுகின்றன. தான் கருதியதையே மனிதன் உரிமையாகப் பெறுகின்ருன். உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுங்தான் உள்ளியது உள்ளப் பெறின். (குறள், 540) இந்த வேத மந்திரத்தை ஈண்டு உள்ளம் கொண்டு ஊன்றி யுனா வேண்டும். ஒருவன் எண்ணியதை எண்ணியபடியே யாண் டும் எளிதாக எய்தலாம்; ஆனல் அந்த எண்ணம் இன்ன வண்ணம் இருக்க வேண்டும் என இதில் உணர்த்தி யிருக்கும் உண்மையை உணரும்தோறும் மனத்தின் இயல்பும் கினைப்பின் நிலையும் வியப் பாய் வெளிப் படுகின்றன. விழித்து கோக்கிய கண் வெளியே ஒளியைக் காணுகின்றது; கினைத்து ஊக்கிய மனம் நேரே சீரைப் பெறுகின்றது. உள்ளியது உள்ளப் பெறின் உரிய பொருள் ஒடி வரும்; மறந்து விடின் எல்லாம் இறக்து படும் என்க. மறப்பு கேடு ஆகின்றது; கினைப்பு ஆக்கமாய் நிலவுகின்றது. நினைப்பு கிலே எல்லாம் கெடிய திரு. என்றது கினேவுக்கும் திருவுக்குமுள்ள உறவுரிமையை உணர் த்தி கின்றது. அரிய பெரிய செல்வங்கள் எல்லாம் மனிதன் கருதி முயன்றதிலிருக்தே பெருகி வந்திருக்கின்றன. வறியனை ஒர் இளைஞன் ஒருநாள் மாலையில் மலைச் சாால் வழியே கடந்து போனன்; அங்கே வானுற ஓங்கி வளர்ந்து கிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/228&oldid=1325982" இலிருந்து மீள்விக்கப்பட்டது