பக்கம்:தரும தீபிகை 3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று கி. 1027 .'பாழான என்மனம் குவிய ஒரு தங்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ?” என இறைவனை நோக்கித் தாயுமானவர் இங்கனம் உருகி யிருக்கிருர், மனம் குவிந்து வசமாயின் மனிதன் அதிசய மகான் ஆகின்ருன். மன அமைகி இவ்வாறு மகிமையை விளைத்து வரு த லால் அதனை உரிமையாக்கிக் கொள்ளப் பெரியோர்கள் அரிய தவம் புரிகின்றனர். ஒரு நிலையில் கில்லாமல் பல வழிகளிலும் சாவி ஒடுதலால் மனத்தை அடக்குவது செயற்கு அரிய செயலாய் எவரும் வியப் புற கின்றது. ஆன்ம யோகத்துக்கு இடையூருய் மீறி மாறுபடும் பொழுது மேலோர் அதனைச் சீறி அடக்குகின்றனர். மனம் எனும்ஒர் பேய்க்குரங்கு மடப்பயலே நீ தான் மற்றவர்போல் என நினைத்து மருட்டாதே கண்டாய் இனமுற என் சொல்வழியே இருத்தினனின் சுகமாய் இருந்திடு என்சொல்வழி ஏற்றிலேயா ேைலா தினையளவுன் அதிகாரம் செல்ல ஒட்டான்:உலகம் சிரிக்கவுனே அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே கனவில்எனே அறியாயோ யார் என இங்கிருந்தாய் ஞான சபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. (அருட்பா) இசசமலிங்க சுவாமிகள் மனத்தோடு போராடியிருக்கும் கிலையை இது கேரே காட்டியிருக்கிறது பேய்க் குரங்கு என்று திட்டியத அதன்மேல் உள்ள எரிச்சலை விளக்கியது. 'எனக மனம் ஆகிய குரங்கு கொடிய மோகக் காட்டில் எப்பொழுதும் ஒடி க் கிரிகிறது; ஆசை என்னும் நெடிய மாக் ைெளகளில் கடிது காவுகின்றத; பருவமங்கையருடைய கொங்கை கள் ஆகிய மலைகளில் ஏறிக் கூக்காடுகின்றது: கையில் ஒடு எக்திப் பிச்சை எடுக்கிற ஒ. பரமசிவமே! உன் தொழிலுக்கு இங்கக் குரங்கு நல்ல உபயோகமாயிருக்கும்: இதனைப் பிடித்துக் கொண்டு போ' என ஆதிசங்கராசிரியர், சிவானந்தலகரி என்னும் வட மொழி நாலில் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். மே ஹ்ருதய கபிம் அக்யக்க சபலம்' ன் மனக்குங்கு மிகவும் சபலமுடையது” என அக்க மகானே கூறியிருக்கலால் எத்தகைய யோகிகளையும் அலைத்த நிலைகுலைத்த கிற்கும் அதன் கிலே தெரியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/256&oldid=1326011" இலிருந்து மீள்விக்கப்பட்டது