பக்கம்:தரும தீபிகை 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1258 த ரும தீ பி ைக என ஒளவையார் இவ்வாறு அறிவு கூறியுள்ளார். பொன்னைப் போற்றிவரின் அது உன்னைப் போற்றியரு ளும; உணமையை ஒர்ந்துணர்ந்து உறுதி நலம் பெறுக. سیتی دیجیتی-تی 5.62. உற்றபசி நீக்கி உறுபுலன்கள் நன்கூட்டிச் சுற்றம் புரந்து சுகம்புரிந்து-பெற்ற பிறவிப் பெரும்பயனைப் பேணி யருளும் அறவி திருவே அறி. )ع-( - இ-ள் உயிர்களுக்கு நேர்ந்துள்ள பசியை நீக்கிப் பொறி புலன் களை யூட்டி, உறவினங்களைப் புரந்து, உயர் சுகங்கள் புரிந்து பிறவிப் பயனே விரும்பியருளுகிற தருமத்தாய் அருமைச் செல் வமே என்க. செல்வம் செய்து வருகிற சீவிய நில்ைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டி அதன் மகிமையை இது உணர்த்துகின்றது. வயிற்றுப் பசியோடு மனிதன் பிறந்திருக்கிருன்; அந்த உயிர்க் கனலுக்கு நாளும் அளவாக உணவும் நீரும் ஊட்டி வர வேண்டும. அவ் ஆட்டம் உயிர் வாழ்வின் ஒட்டமாயுள்ளமை யால் எப்பொழுதும் கப்பாமல் சீவர்கள் அதனைச் செய்து வருகி ன்றனர். வயிறு வளர்த்தலே உயிர்வாழ்வாய் வளர்ந்து வருகிறது. பசி தீர உண்பதும், உறங்குவதுமே மானிட வாழ்வின் மருமங்களாப் மருவி யுள்ளன. பசி எழுங்க பொழுது அதற்கு உணவு தரவில்லையாயின் படு துயரமாய் கெடிதோங்கி கிற்கிறது. அது உயிர்களை வருக்தி வரும் கொடுமையை நினைந்து அழி பசி என்ருர் நாயனர். பசிப்பிணி என்னும் பாவி என்ருர் சாத்தனர். பசி இல்லாகுக; பிணி சேண் நீங்குக என ஓரம்போகியார் பேரன்போடு வேண்டி கின்ருர். இவ்வாறு எவரையும் அச்சுறு த்தி வருகிற பசியை நீக்கும்படி பொருள் அருள் புரிந்து வருக லால் அந்த உபகார நீர்மை முதலில் அறிய வந்தது. உறு புலன்கள் நன்கு ஊட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/103&oldid=1326256" இலிருந்து மீள்விக்கப்பட்டது