பக்கம்:தரும தீபிகை 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி | 294) கொடியவர்களையும் திருடர்களையும் வஞ்சகர்களையும் இலஞ்சம் வளர்த்து வருதலால் அது பஞ்சபா பாதகம் என மேலோரால் அஞ்ச நேர்ந்தது. இலஞ்ச ஒழிப்பு என இக் காலக் தில் ஒரு சட்டமும் இங்கே செய்யப் பட்டுள்ளது. இகளுல் அந்த ஈனத் தீமை இக்க நாட்டில் எவ்வளவு பரவி யிருக்கிறது! என்பதைச் செவ்வையாகத் தெரிந்து கொள்ளலாம். கெட்ட காரியங்களைச் செய்கிற துட்டர்களை அடக்கி ஒடுக்குவது அதிகாரிகளுடைய தொழில். அவரே கேடு செய்யத் துணிந்தால் நாடு எவ்வாறு பாடு பெற்று வரும்? வலியினல் இலஞ்சம்கொள் மாந்தர் பாற்சென்று மெலியவர் வழக்கினே விளம்பல் வாடிய எலிகள் மார்ச்சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம் புலியிடத்தும் சரண் புகுதல் ஒக்குமே. (1) அல்லினில் களவுசெய் பவரை வெஞ்சிறை இல்லிடும் பண்பினுக்கு இயைந்த மாக்களே எல்லினில் எவரையும் ஏய்த்து வவ்வலால் கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே. (2) கொலைஞரும் சோரரும் கொடிய வஞ்சரும் கிலேபெற அவர்கையில் நிதியைக் கொண்டுதண் == ---- == - # * . அலைகடல் உலகியல் அழிக்கும் தீயர்பால் மலே எனப் பாவமும் பழியும் மண்டுமே. (3) பயிரினே வேலிதான் மேய்ந்த பான்மைபோல் செயிருற நீதியைச் சிதைத்துஓர் தியன்சாண் வயிறினே வளர்த்திட வாங்கு மாகிதி வெயிலுறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே. (4) (நீதி நூல்) இலஞ்சத்தால் விளையும் தீமைகளையும், அதனே வாங்குகிற அதிகாரிகளின் இழி நிலைகளையும் இவை . னர்த்தியுள்ளன. உரைகளில் பொதிந்துள்ள உணர்வு நலங்களை ஊன்றி உணர்ந்து கொள்பவர் அகன் தீமையைத் தேர்ந்து கெளிந்து கொள்ளுவர். இரவில் மறைந்து திருடுகிறவனேக் கள்ளன் என்று எள்ளி இகழ்ந்து சிறையில் தள்ளிக் கொடிய துயரைச் செய்கின்ருர், அங்ஙனம் எள்ளித் தண்டிக்கின்ற அதிகாரிகளே அந்தக் கள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/144&oldid=1326297" இலிருந்து மீள்விக்கப்பட்டது