பக்கம்:தரும தீபிகை 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1298 த ரும தி பி ைக உள்ளம் சுருங்க உயர்வு சுருங்குகிறது. அது பெருங் தன்மையாய் விரிந்து உயர்ந்த போது பெரி யோர், மேலோர், உயர்க்கோர் என வெளியே ஒளி பெற்று நிற்கின்ருர். மனம் உயர மதிப்புகள் உயர்கின்றன. மனத்தின் அளவே மனிதன் மாண்படைந்து வருகிருன். அரச மன்றில் அங்கங்களாப் அமர்ந்து தேசப் பணிகளைச் செய்ய நேர்ந்தவர் எவ்வழியும் செவ்வியராய்த் திருந்தியிருப்பின் அவர் திவ்விய நிலையில் சிறந்து திகழ்வர். கருமக் கலைவர் கரும நெறிகளைக் கழுவி ஒழுகின் உலக மக்கள் வாழ்வு உயர் நிலைகளைக் கழுவி எழும். அங்கே இன்ப நலங்களும் பொங்கி விளங்கும். பண்போடு இதம் புரியின். என்றது பதவியாளருடைய பான்மை தெரிய வந்தது. இனிய நீர்மை பண்பு என இசைந்தது. அதனையுடையவர் இனியராய் வருதலால் மனிதருள் அவர் மாண்பினராயினர். தலைமையான அதிகார பதவியில் அமர்பவர் பண்புடைய ராயிருத்தல் வேண்டும். இலரேல் அவரால் நாட்டுக்குக் துன்ப ம்ே நேரும். தேச காரியங்கள் இராச காரியங்களாய்ச் சிறந்தி ருத்தலால் அவற்றைச் செய்ய நேர்ந்தவர் செவ்வியராய் உயர்ந் திருத்தலே வையம் எவ்வழியும் எதிர்பார்த்து நிற்கின்றது. உரிமையாக வாய்த்த பதவியை அருமையாகப் போற்றி வரின் பெருமைகள் பெருகி வருகின்றன. பலரும் வணங்கி வழி படும் மாட்சிமை யுடைமையால் அதிகாரம் அழகிய காட்சியாய் ஒளி புரிகின்றது. உத்தியோகம் புருட லட்சணம் என்பது பழ மொழி. தொழிலின் அளவே எழில் எழுகின்றது. மனிதனை மாண்புறுத்தி வருதலால் அதிகாரம் ஒரு மாய மோகமாய் மருவி நிற்கிறது. இத்தகைய விழுமிய பதவியைப் பெற்றவர் எத்தகைய நிலைகளிலும் வழுவாமல் ஒழுகி வர வேண் டும். வழுவின் பழியும் இழிவும் ஒழியாமல் பற்றிக் கொள்ளும். அதிகாரி செய்யும் பிழைபாடுகளுள் மிகவும் கொடியது பரிதானம் வாங்குதல். நடுவு நிலைமையுடன் நின்று காரியங்களை யாண்டும் நேர்மையாகச் செய்யவுரியவன் நெஞ்சம் திரிந்து இலஞ்சம் கொள்ளின் அது படு வஞ்சகமா ப்ப் பழிபடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/143&oldid=1326296" இலிருந்து மீள்விக்கப்பட்டது