பக்கம்:தரும தீபிகை 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

図 58. ப த வி 1297 என்றது அதிகாரிகளுடைய நீர்மைகளை நினேந்துணர வந்தது. நெறி முறையே அவர் கருமங்களைச் செய்யின் தேசம் கேசு மிகப் பெறுகின்றது. அவரும் சீர்மையுடையராய்ச் சிறந்து விளங்குகின்ருர். ஆட்சியளவு மாட்சி விளைகின்றது. நேரே சரியாய்க் காணுத கண் குருடாப் இழிகின்றது. கேளாத காது செவிடு எனப் படுகின்றது. சடவாத கால்கள் முடமாகின்றன. அது போல் கம் கடமைகளைக் கருதிச் செய் யாதவரும் கடையராயிழிகின்றனர். உரிய பொறுப்புகளை உணர்ந்து அதிகாரிகள் உண்மையாய் உழைத்து வர வேண்டும்; உழைப்பில் பிழைப்பு ந்ோலாகாது. கருமக் கலைமையைக் கருதிச் செய்க என்பது கருத்து.

==

573. நாட்டில் குடிசனங்கள் நன்மையுற நன்காய்ந்து விட்டில் குடும்பமென மேலோர்ந்து-ஈட்டிகின்ற பண்போ டிகமாய்ப் பணிபுரியின் அன்னவனே மண்பேணி நிற்கும் மகிழ்ந்து. (க.) இ-ள் கம் குடும்பத்தை உரிமை அன்போடு கருதிப் பேணுவது போல் நாட்டிலுள்ள குடி சனங்களையும் ஆதரவோடு அதிகாரி கள் பேணிவரின் அவரை உலகம் புகழ்ந்து போற்றி மகிழ்ந்து வரும் ు ன்க. அதிகார நிலையில் அமர்ந்திருப்பவன் குறியோடு கூர்ந்து ஒர்ந்து செய்யவுரிய கடமையை இது குறித்துள்ளது. கருமங் கள் புரிவதில் பல மருமங்கள் மருவி யிருக்கின்றன. தன்னுடைய உறவு முறைகளுக்கே மனிதன் மனம் உவந்து உரிமையுடன் உதவி செய்ய நேர்கின்ருன். தன் சாதி, தன் மதம், தன் இனம் என இன்னவாருன வேறுபாடுகளால் மனி தன் கூறுபட்டு நிற்கிருன். உடலளவில் தோன்றியுள்ள இந்தச் சின்ன வேற்றுமைகளையெல்லாம் அறவே மறந்து விட்டு எல்லா ரிடமும் பரந்த அன்பு செலுத்தி நேர்மையோடு நீர்மை புரிந்து வரின் அவன் சிறந்த மனிதனப் உயர்ந்து விளங்குகின்ான், 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/142&oldid=1326295" இலிருந்து மீள்விக்கப்பட்டது