பக்கம்:தரும தீபிகை 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1296 த ரும தீ பி ைக T அகட்டி அதிகாரங்கள் செய்து வங்காலும் உள்ளே பலருக்கும் ஊழியராகவே அவர் வாழ்ந்து வருகிரு.ர். தன் கொழிலில் பிழைகள் நேராகபடி பார்த்து, உலகம் பழியாதவாறு ஒழுகி, கனக்கு மேலேயுள்ள கலேவன் பணிக்குக் கலை சாய்ந்து எவ்வழியும் அஞ்சி நடந்து வரும் நிலையில் இருக்க லால் அதிகாரியினுடை IM M. நெஞ்சக் கவலைகள் கெடிது நீண்டுள் ளன. அவனுடைய வாழ்வு கூர்மையான வாள்முனையில் கடப் பது போல நாளும் சூழ் நிலைகள் வாய்ந்து நிற்றலால் அந்த அதிகார வாழ்வின் நீர்மையும் நிலைமையும் திலே தெரியலாகும். பிறருடைய பார்வையில் உயர்ந்த பதவியில் இருப்பது போல் சிறந்து தோன்றிலுைம் தன்னுடைய உள்ளத்தில் கவலை யும் பொறுப்பும் அதிகாரிக்கு நிறைந்திருக்கின்றன. பிறரை அடக்கியாள நேர்ந்தவன் யாண்டும் அடங்கி ஒடுங்கி நெறியே நடக்க வேண்டியவனுகின்ருன். நெறியோடு நடந்து வரும் அளவே பதவி நிலைத்து வருகிறது. நடை பிறழ்ந்தால் இடை முரிந்து இழிந்து விழ்கின்ருன். “The standing is slippery, and the regress is either a downfall or at least an eclipse, which is a melancholy thing.” (Great place) 'நிலை தவறினல் அதிகாரி அகோ கதியில் விழ்கிருன்; துன்ப இருள் அவனேச் சூழ்ந்து கொள்ளுகின்றது' என்னும் இது இங்கே அறிய வுரியது. உடலுக்குக் கண் வாய் கை கால்களைப் போல் நாட்டுக்கு வினையாளர்கள் அமைந்திருக்கின்றனர். அந்த அதிகாரிகள் கத் தமக்குரிய கருமங்களைச் செம்மையாகச் செய்து வரின் தேசம் நன்மைகள் பல சுரந்து ஒளி மிகப் பெற்று உயர்ந்து விளங்கும். தம் கடமைகளை ஒர்க் து அவர் வினே செப்யா கொழியின் அங்கே மடமையிருள் மண்டிக் கொடுமைகள் பல நேரும். உறுப்புகள் சரியாகத் தொழில் செய்ய வில்லையானுல் உடல் இழிந்து படுகின்றது; வினையாளர்கள் தம் கருமங்களைக் கருதிச் செய்யாதொழியின் காடு பீடழிந்து கேடுறுகின்றது. விதியாகச் செய்துவரும் அளவே சீர்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/141&oldid=1326294" இலிருந்து மீள்விக்கப்பட்டது