பக்கம்:தரும தீபிகை 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1323 முறைகளைச் செய்கின்ற அந்த நீதிபதி எவ்வழியும் தருமதேவ தையின் திருவருளே மருவி மகிழ்கின் முன். 580. உரிய கருமம் உரிமையுடன் செய்யின் அரிய தருமவான் ஆகிப்-பெரிய மனிதனென வையம் மதித்து வனங்கப் புனிதளுப் கிற்பன் பொலித்து. (s)) இ-ள் தனக்கு உரிய கருமங்களை நெறிமுறையே நின்று உரிமை யோடு செய்யின் அவன் அரிய கருமவான் ஆகின்ருன், ஆகவே பெரிய மகான் என உலகம் அவனே மதித்து வணங்க உயர்ந்து விளங்குவன் என்பதாம். இது கருமமே கருமம் என்கின்றது. இந்த உலகில் பிறந்துள்ள எந்த மனிதனும் எ வ்வழியும் தொழில் செய்யும் •55 # _ 53) £ r) 3RAY | / இயல்பான உடைமையாயப் மருவி வந்திருக்கிருன். செயல், வினே, கருமம் என்னும் மொழி கள் மனிதனல் செப்பப் படுவன என அவற்றின் நிலைகளை நேரே விளக்கி நிற்கின்றன. கருமங்களைக் கருதிச் செய்யும் அளவே மனிதன் உறுதி குலங்களை அடைந்து வருகிருன். செய வின் அளவே உயர்வுகள் வருதலால் அதன் இயல்புகளின் நிலைகளை இனிது தெரியலாகும். உரிய கருமம் என்றது தான் உரிமையாகச் செய்ய நேர்க் துள்ள வினைகளை. மனிதனுடைய கிலேமைகளுக்குத் தக்கபடி தொழில்கள் அமைந்திருக்கின்றன. எந்த நிலைமையிலும் எந்த மனிதனும் எந்தக் காரியத்தையும் செய்ய சேர்ந்திருக்கிருன். கருமங்களைச் செய்யாமல் அயர்த்திருப்பின் அவை கடினமான கடன்களாய் வளர்ந்து நிற்கின்றன. கருதி உழைத்தவன் கண்ணியமாய்ப் பிழைக்கின்ருன்; அங்ஙனம் உழையாதவன் பிழையா யிழிந்து பேதையாயுழலு கின்ருன். கருமத்தைக் கையிழந்து நிற்பவன் தருமத்தையே இழந்தவனுகின்ருன், ஆகவே அவனுடைய வாழ்வு பாவச் சூழ் வாய் இழிவடைந்து பழி படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/168&oldid=1326321" இலிருந்து மீள்விக்கப்பட்டது