பக்கம்:தரும தீபிகை 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1324 த ரும தீ பி ைக செப்கின்ற கருமங்களிலிருந்தே பொருள் புகழ்கள் எல் லாம் உளவாகின்றன. கை செய்கின்றவன் மெய் செய்கின்றன் என்னும் பழமொழி வினையாளனுடைய மேன்மைகளை விழி தெரிய விளக்கியுள்ளது. அரிய பெரிய காரியங்களை ஆற்றி வருபவன் உலகம் போற்ற ஒளி சிறந்து நிற்கிருன். காலம் விரைந்து கழிந்து கொண்டே போகின்றது; அவ் வாறு கழிகிற ஒவ்வொரு கணமும் பயன் படும்படி எவன் செய்து வருகிருகுே அவன் காலனே வென்றவனகிருன். உரிமை யாக் கிடைத்துள்ள பொழுதை இனிமையாகப் பயன் படுத்தின வன் பெருமை மிகப் பெறுகின்ருன். நல்ல கருமங்களை நாடிச் செய்கின்றவன் நலம் பல காண் கின்ருன் எனக் கருமக் காட்சியைக் குறித்து வன வாச காலத் தில் தருமருக்கு ஒரு முனிவர் போதித்திருக்கிரு.ர். வினையாளன் வெற்றியாளன். என்னும் பழமொழி காரிய கருத்தாவின் சீரிய நிலைகளைத் தெளிவுறுத்தி யுள்ளது. விதி முறையான செயல்கள் அதிசய மகிமைகளை அருளி வருகின்றன. தொழிலாளிகளால் உலகம் ஒளி பெற்று வருதலால் அவர் இயற்கை அன்னையின் எழில் மக்களாய்ச் சிறந்து எவ்வழியும் உயர்ந்த பலன்களை அடைந்து கொள்ளுகின்றனர். முயற்சி யுடையவனுக்குத் தானகவே உயர்ச்சி யுண்டா கிறது. உழைக்கின்றவனே உண்ண வுரியவன் என்று கண்ணன் உரையாடி யுள்ளது ஈண்டு எண்ண வுரியது. வேலை செய்தவன் கூலி பெறுகின்ருன். தன் கடமையை எவன் கருதிச் செய்கின்ருளுே அவனே நாடி உரிமைகள் ஒடி வருகின்றன. கரும உணர்ச்சியுள் உறுதி யும் ஊக்கமும் பெருகி.அரிய பல மருமங்கள் மருவியிருக்கின்றன. “Men who their duties know, But know their rights.” (Jones)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/169&oldid=1326322" இலிருந்து மீள்விக்கப்பட்டது