பக்கம்:தரும தீபிகை 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. பத வி 1325 'கடமைகளை அறிகின்றவர் தங்கள் உரிமைகளையும் உணர் கின்ருர்' என வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இவ்வாறு கூறி யுள்ளார். வினேயின் விளைவுகள் அனுபவங்களாய் வருகின்றன. உரிமையுணர்ச்சி உள்ளத்தில் உறுதி நலங்களை ஊட்டி யரு ளுகின்றது. செவ்விய வினைகளைச் செய்தவன் திவ்விய நிலைகளை எய்தி மகிழ்கின்ருன். வித்திலிருந்து விளைவுகோன்றுதல் போல் வினையிலிருந்து பலன்கள் தோன்றுகின்றன.

  • சீவர்களை ஊட்டி ஆட்டி வருதலால் கருமம் தெய்வீக ஆற் றலுடையதாப்ப் போற்ற நின்றது. வினைகளின் மூலமாகவே இறைவன் எல்லாவற்றையும் இயக்கி வருகிருன்.

கர்ம ப்ரஹ்மோக்பவம் வித்தி' (கீதை, 3-15) கருமம் பிரமத்திலிருந்து பிறந்தது என அறிந்து கொள்' என்று கண்ணன் அருச்சுனனுக்கு இன்னவாறு போதித்திருக் கிருன். சிவன் செய்வது தேவன் தந்தது என்பது தெரிய வந்தது. கருமத்தைச் செய்கிறவன் தெய்வத்தின் பிரியத்தைப் பெறு கிருன் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். அரிய தருமவான் ஆகி நிற்பன். என்றது உரிய கருமங்களை உணர்ந்து செய்பவன் அடைந்து கொள்ளும் உயர்ந்த நிலைமை உணர வந்தது. தன் செயல் இயல்களால் அயல்கள் நலமடைய ஒழுகி வருபவன் விழுமிய கிலைகளில் விளங்கி நிற்கின்ருன். கரும பூமியாகிய இவ்வுலகில் பிறந்தவன் தனக்கு உரிய கருமங்களைச் செய்த போதுதான் கடன்கள் தீர்ந்தவனப் உயர்ந்து திகழ்கிருன். உழையாமல் உண்பது பிழையாம் எனச் சவுனக முனிவர் ஒர் அரசனை நோக்கிச் சொன்னது உழைப்பின் தன்மையை யாவரும் அறிய உணர்த்தி யுள்ளது. உழைக்கும் ஒருவனே உண்ண வுரியன் பிழைக்கும் அவனே பெரியன்-இழைக்கின்ற நல்ல பலன்களெலாம் நாடி அவனிடமே ஒல்லே அடையும் உவந்து. * வினையாளனது வியனிலையை இது விளக்கி யுள்ளது. உரிய கருமத்தை ஒர்க் து புரிகிறவன் பெரிய மனிதனுப்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/170&oldid=1326323" இலிருந்து மீள்விக்கப்பட்டது