பக்கம்:தரும தீபிகை 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1326 த ரும தீ பி. கை தேர்ந்து வருகிருன். உழைப்பதே தன் கடமை என உணர்ந்து கொண்டவன் உயர்ந்து விளங்குகிருன். அதிகார பதவியை அடைந்தவன் எவ்வழியும் விதிமுறை ஒழுகி யாவருக்கும் இதம் புரிந்து வரின் அவனைத் தேவனுக மதித்து வையம் வாழ்த்திவரும் ஆதலால் அவ் வரவு நிலையை உறவாக அவன் உரிமை செய்து கொள்ள வேண்டும். பெற்ற பதவியைப் பேணி ஒழுகிவரின் உற்ற பிறவி ஒழியுமே---பெற்றம் உடையான் பதவி உரிமையாய் உன்னே அடையும் அதனே அறி. தன் கடமையைக் கருதி யுணர்ந்து புனிதமாகச் செய்து முடித்தவன் இனிய கதியை எளிதே அடைகிருன் என்னும் இது ஈண்டு உணர வுரியது. பெற்றம்= இடபம். அதனை வாகனமா வுடையவன் சிவன் என்க. கன் கருமக்கை உரிமையோடு ஒர்ந்து தகுதியாகச் செய்கின்றவன் தவம் செய்தவனகின்ருன்; ஆகவே அவன் சிவகதியை மேவுகின்ருன். கருமம் கருதிப் புரியின் அதுவே தருமம் தவமும் கரும். _ இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பதவி என்பது தலைமை நிலையுடையது. வினை புரிய வாய்ந்தது. விதிமுறை தோய்ந்தது. சேவை செய்ய நேர்ந்தது. கடமை மிக ஊர்ந்தது. உரிய பணி வழுவின் பெரியபிழை விளையும். கரும நீதி தரும நிலையம். - நீதிமான் நிலைதவறின் பாதகமாகும். கெவ்விய நீதிமுறை திவ்விய திரு. புனித வினையாளன் புண்ணியன் ஆகிருன். டுஅ வது பதவி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/171&oldid=1326324" இலிருந்து மீள்விக்கப்பட்டது