பக்கம்:தரும தீபிகை 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்விச் செருக்கு 1329 இறைவன் புதல்வன் நீ எவ்வளவோ கல்வி பெறுதற்கு உரிய பெரியன். மனிதன் உரிமையோடு உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மையை இது உணர்த்தியுள்ளது. கடவுளுடைய பிள்ளை என்று தன்னை மனிதன் தெளிந்து கொள்ளின், எவ்வளவு மகிமைகளை அவன் அடைந்து கொள்ளுவான்! உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால் புன்மைகளில் இழிந்து புலையாடிக் திரிகின்றன். உயர் குலத் தலைமையை மறந்து போய் இழிபுல நிலைகளில் அழுந்தி உழலுவது பழி துயரங்களாய்ப் படிந்து வருகிறது. விழுமிய உண்மைகளை விழிதிறந்து காணுமையால் மனிதன் அழிதுயரங்களில் இழிந்து அலமருகின்ருன். இறைவன் எல்லாம் அறிய வல்லவன்; அவனுடைய புதல் வஞன நீயும் யாவும் அறிய வுரியவன். அரிய பெரிய அந்த நிலை யிலுள்ள நீ சிறிது கற்றதைப் பெரிதாக நினைந்து செருக்குவது எவ்வளவு பேதைமை? எத்துணை இழிவு உய்த்துணருக. பரமான்மா வாகிய அந்தப் பெருஞ் சோதியிலிருந்தே இந்தச் சீவான்மா வெளிவந்துள்ளது. இவ்வுண்மையை விழி திறந்து நோக்கி விழுமிய பண்புடன் வாழுக. பெரிய இடத்துப் பிள்ளைே பெரிய தன்மையை மருவுக. சிறிய புன்மையை ஒருவுக. உள்ளச் செருக்கு எள்ளலை விளைத்து இழிநிலையில் தள்ளி விடும்; அந்தப் பழிகிலே படியாமல் பாது காத்து ஒழுகுக.


582. அறிவை வளர்க்கும் அருங்கல்வி கற்றும் செறிவின்றி உள்ளம் செருக்கல்-நெறிகின்று காணுகின்ற கண்பெற்றும் காட்சிநலம் துய்க்காமல் வினே கெடுத்த விதம். )رسع இ-ள் - நல்ல அறிவை வளர்த்தருளுகின்ற அரிய கல்வியைக் கற்றும் அடக்கமின்றி அகம் செருக்கி நிற்றல் காட்சி யின்பங்களைக் கண்டு மகிழ உரிய கண்களை வினே கெடுத்துக் குருடாக்கிக் கொண்டது போல் கொடிய துயரமாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/174&oldid=1326327" இலிருந்து மீள்விக்கப்பட்டது