பக்கம்:தரும தீபிகை 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l338 த ரு ம தி பி ைக என்றது மனிதன் கற்றுள்ள கல்வியின் சிறுமை தெரிய வக்கது. கல்வி நிலை எல்லை இல்லாதது, அதில் சிறிது அளவே ஒருவன் கற்றுக் கொள்ளுகிருன். படித்தது பிடி அளவு; படியா தது படி அளவு எனறபடி படிபபு எங்கும படிகதுளளது. கல்வியின் பெருமையையும் கான் கற்றுள்ள சிறுமையை யும் ஒருவன் உற்று உணர்ந்தால் உள்ளம் செருக்கான். அறியா மையால் அகங்காரம் விளைகிறது; அறிந்தபோது அது மறைந்து போகிறது. மெய்யறிவால் மேன்மைகள் வருகின்றன. நீ எவ்வளவு படித்திருக்கிருப்? உனக்கு என்ன தெரியும்? 茂 படித்துள்ளது அணுவினும் சிறியது; படிக்க வேண்டியது அண்டத்திலும் பெரியது; கலைகள் அலை கடல்களிலும் விரிவாய்ப் பெருகி யுள்ளன. சிறு திவலை அளவும் நீ படிக்க வில்லை; உன் கிலைமையை உணர்ந்து பார்த்தால் உள்ளம் நானுவாய்! உண் மையை உணராமையால் புன்மையாய்ச் செருக்குகின்ருப்! எதை யும் அமைதியாப் எண்ணி நோக்கிக் கண்ணியமாப் வாழுக. -== 585. அறிய அறிய அறியாமை தோன்றும் நெறியே ஒருவன் கிறையச்-செறிவோடு கற்றவனே யானுல் கடுகளவும் ஒர்செருக் குற்றவனே யாகான் உனர். (டு) இ-ள் - கலைகளின் நிலைகளை அறியுந்தோறும் மனிதனுடைய அடி, வின் சிறுமை பெருகிக் கோன்றும்; உண்மைகளை நுண்மையாக ஒர்க் து ஒருவன் நன்கு கற்பானே.ஆனல் கடுகின் அளவு கூடச் செருக்கு அடையமாட்டான், உருக்கமாய் கெடிது வியந்து நிற் பான் என்க. அறிவு என்பது உண்மையை உணர்வது. மனிதன் இயல் பாகவே அறிவுடையவன். அந்த இயற்கை பறிவோடு செயற் கை அறிவு சேர்ந்தபோது அவன் உயர்ச்சி மிகப் பெறுகிருன் கல்வி கேள்விகளாகிய பயிற்சிகளால் வரும் அறிவு முயற்சியா ஈட்டிய பொருள் போல் மருவியுள்ளமையால் அது எ வ்வழியு பெருமையாய் இன்பமும் மகிமையும் தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/183&oldid=1326336" இலிருந்து மீள்விக்கப்பட்டது