பக்கம்:தரும தீபிகை 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் வி ச் செரு க் கு 1337 நீ யார்? எங்கிருந்து வருகிருப்?' என்று இங்ங்னம் தெலுங்கில் கேட்டாள். கவிராயர் ஒன்றும் தெரியாப ல் விழித்தார். அவள் சிரித்தாள். இரவு அங்கே ஊமை போல் கங்கியிருந்து மறுநாள் வெளியே வந்தார். அங்கு சேர்ந்த நிலைமையை ஒரு கவியாகப் பாடினர். அந்தப் பாட்டு அயலே வருகின்றது. 'ஏமிரா ஒரு என்ருள் எந்துண்டி வஸ்தி என்ருள் தாமிராச் சொன்ன வெல்லாம் தலேகடை தெரிந்த தில்லை; போமிராச் சூழும் சோலே பொருகொண்டைத் திம்மிகையில் காமிராப் பட்டபாடு நமன் கையில் பாடு தானே.” தமிழில் பெரிய புலவராப் இருந்தும் தெலுங்கு பாஷை தெரியாமையால் கவிராயர் இக்கப்பாடு பட்டிருக்கிருர், இங்கப் பாட்டைப் பாடும்போது அவருக்குச் சிரிப்பு வந்திருக்கும் என்று தெரிகின்ற க. மனிதனுடைய அறிவின் எல்லையையும் சிறுமையையும் இக்க நிகழ்ச்சி நன்கு காட்டியுள்ளது. ஒருகேசக்கவன் பேசுகிற மொழி அயல் தேசத்தவன் அறியான் ஆதலால் இயன்ற அளவே பேச்சுவழக்குகள் கடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மொழிகள் உலகங்களில் பரவி யிருக்கின்றன நாம் தமிழ்காட்டில் பிறந்திருக்கிருேம்; தமிழைக் தாய் மொழியாப் பேசிவருகிருேம். இம்மொழியில் அரியபல நூல்கள் பெருகி இருக்கின்றன. காவியக் கலைகள் சீவிய நதிகளாய்ச் செழித்து வளர்ந்துள்ளன. ஒரு நூலைச் செவ்வையாகத் தெளிந்து கொள்ளவே மனிதனது வாழ்நாள் முழுவதும் காணுது; அவ்வ ளவு மதி நலங்கள் எ வ்வழியும் மன்ன்ரி கிற்கின்றன. ஓர் மொழியே கற்றுள்ளாய்! எண்ணரிய பாஷைகளுள் உன் கண் எதிர்ப்பட்ட ஒரு மொழியையே 厝 படித்திருக்கிருப் என்றது தன் படிப்பை அவன் எண்ணி யுணர்ந்து எளிமை தெளிய. கற்ற கல்வியும் அரை குறையானகே. இன்னவாறு சின்ன நிலையில் இருந்து கொண்டு தன்னைப் பெரிய மதிமான எண்ணிச் செருக்குவது என்ன மடமை! ஒன்றும் கன்ரு அறிய கில்லாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/182&oldid=1326335" இலிருந்து மீள்விக்கப்பட்டது