பக்கம்:தரும தீபிகை 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1344, த ரு ம தீ பி. கை செருக்கு உன் உள்ளம் புகின் நீ பேய் வாய்ப் புகுந்தவ ஞ ப் நோய்வாய்ப் படுகின்ருப்! எனக் கன் பிள்ளைக்கு ஒர்தங்தை அறிவூட்டியுள் ளது இங்கே அறிய வுரியது. புல்லிய கல்வியர் புலை நிலையில் இழிந்து பொல்லாங்கு புரித லால் யாதும் கல்லாதவரினும் அவர் பொல்லாதவராகின்ருர். - “A little learning is a dangerous thing.” (Pope)

அற்பக் கல்வி ஆபத்துடையது” என போட் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் கூறியிருக்கிருர், *

சிறிது கற்றவர் வீண் பெருமை கொண்டு மேட்டிமை புரி தலால் அவர் யாண்டும் அபாயமுடையராப் அவமதிக்கப் படு கின்ருர். சின்னப் புக்தி இன்னல் கிலேயமாகிறது. ஒளி தேயின் இருள் சேரும். என்றது அறிவு மங்கிய பொழுது அகக்கை பொங்கி எழுங் து கவிந்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள வந்தது. இருள் சேராதபடி தெருள் சேர்ந்து உயர்க. செருக்கு மடமை மயக்கங்களால் எழுதலால் அது இருள் என நேர்ந்தது. ஒளி புகுந்த பொழுது இருள் ஒழிந்து போகல் போல் நல்ல அறிவு எழுந்த போது செருக்கு அழிந்து போகிறது. இனிய கல்வி இன்னுச் செருக்காய் எழுந்தது என்னே? எனின், சேர்ந்த இனத்தின் தீமையால் விளைந்தது.என்க. நல்லவர் கற்ற கல்வி இனிமை சுரங் த கன்மையாய் வருகிறது; தியவர் * 1്,ാജ கொடுமை நிறைந்து தீமையாப் விரிகிறது. பாம்புண்ட ர்ேஎல்லாம் நஞ்சாம்; பசுவுண்ட தேம்படு தேண்ணிர் அமுதமாம்-ஒம்பற்கு ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம்; அதுபோல் களியாம் கடையாயார் மாட்டு. (அறநெறிச்சாரம்) L. EFF அருந்திய நீர் பால் ஆப் வருகிறது; பாம்பு குடித்த நீர் நஞ்சமாய் மாறுகிறது. உயர்ந்தோர் பயின்ற கல்வி ஞானமாப் ஒளி விசி உயர்கின்றது; இழிந்கோர் பயின்றது களி செருக் காப் இழிவுறுகின்றது என முனைப்பாடியார் இங்வனம் பாடி யிருக்கிரு.ர். மருண்ட மயக்கம் இருண்ட இயக்கமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/191&oldid=1326344" இலிருந்து மீள்விக்கப்பட்டது