பக்கம்:தரும தீபிகை 4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்வி ச் செருக்கு 1345 தெருண்ட மேலவர் நல்ல நீர்மையோடு அடங்கியிருக்கின்ருர். மருண்ட கீழவர் பொல்லாச் செருக்கராப்ப் பொங்கி நிற்கிரு.ர். செருக்கு சின்னத்தனமானது; அதனேயுடையவர் சிறியராய் இழிகின்ருர், அங்கச் சிறுமையை மருவிச் சீரழியாதே; எவ்வ ழியும் பெரிய நீர்மைகளை உரிமையோடு பேணி ஒழுகுக. சின்ன இயல்பே செருக்காய் எழுதலால் அன்ன மயலே அறிந்துமே-மன்னிய மேலான ர்ேமையை மேவி ஒழுகினுன் பாலாகும் மேன்மை படிந்து. இதனை நெஞ்சில் நினைத்து கொள்ளுக. _ _ - 587. கல்வியில்தாம் வல்லரென்று கண்டார் வியந்துசொலப் புல்லறிவோர் தாமே புகழ்ந்துசொல்லி-நல்லறிவோர் தம்மைப் பழித்துத் தருக்குவார் தாழ்வன்றி எம்மை யுயர்வார் இவர். (எ) இ-ள் தாம் கல்வியில் வல்லவர் என்று கண்டவர் வியந்து சொல் லும்படி தம்மைத் காமே புகழ்ந்து நல்லறிவாளரை இகழ்ந்து புல்லறிவாளர் புலையாடி நிற்கின்ருர். ஈனச் செருக்குடைய இவர் இழிந்து காழ்வதை உணராமல் அழிந்து ஒழிவது அவலமாயுளது. உலகப் புகழ்ச்சிகளில் மனிதன் பெரு மையல் கொண்டு பேயாய்த் திரிகிருன். கன்னே எல்லாரும் வியந்து புகழ்ந்து சொல்ல வேண்டும் என்றே யாண்டும் நசையாப் நயந்து அலைகிருன். இந்த அவல ஆசைகள் எங்கனும் பெருகியுள்ளன. கல்வி செல்வம் அழகு ஆண்மை முதலியன புகழ்மொழி களுக்கு உரியன ஆதலால் அவற்றுள் எதாவது ஒன்று சிறிது கிடைத்தாலும் அதனைப் பெரிதாகப் பிலுக்கிக் காட்டிப் பிறரு டைய வாப்களிலிருந்து புகழ் மொழிகளை அடைய விரும்பிப் பேராவலோடு உழலுகின்ருன். கன்னே ப் புகழ்ந்து சொல்லுவார் யாரும் இல்லாமையால் கானே புகழ்ந்து பேசத் தொடங்குகின் முன். வினை இங்கப் பேராசையில் அவன் மோசம்போகிருன் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/192&oldid=1326345" இலிருந்து மீள்விக்கப்பட்டது