பக்கம்:தரும தீபிகை 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1400 த ரும தீ பி ை. வறுமை சிறுமை பழி துயரம் முதலிய அவலங்களையே விளேத்துவருகிற கள்ளை ஒருவன் விழைந்து உண்பது வியப்பாயுள் ளது. ஊனம் உணராமையால் மானமழிந்து ஈனமுறுகின்றனர். பழகியபழக்கத்தால் அழிநிலை கெரியாமல் அநியாயமாய் அழிந்து படுதலால் குடியர் குடிகேடர் எனப் பழி படிந்தனர். தாம் நல்லாயிருக்க வேண்டும் என்றே இ! ல்லாரும் விரும்பு கின்றனர்; அவ்வாறு கருதி வருபவர் பொல்லாக கள்ளையுண்டு புலேயாடி ப் போவது கொலேயாத தொல்லையாய்த் தோன்றுகிறது. பொறிகளையும் புலன்களையும் அடக்கி நெறியே ஒழுகி வரு பவர் உயர்க்க மனிதராய் ஒளிபெற்று வருகிருர், அவற்றின் வழியே இழிந்து செல்பவர் இழிந்தவர் ஆகின்ருர். அதன் மேலும் களிபராப்ப் பழிவழியில் செல்பவர் பாவிகளாயிழிந்து பாம்படுகின்றனர். ழ்படுகின், உயிர்க்கு ஒளியாய் நின்று உறுதி நலங்களை உணர்த்தி வரு கிற உணர்வு பாழாய்ப் போகலால் கள்ளுக்குடியர் விழிகண் குருடராய் அழிதுயரங்களில் ஆழ்ந்து அவமே அழிகின்ருர். உள்ளுண்மை ஓரார்; உணரார் பசுபாசம்; வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுருர், தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுருர், கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. (1) மயக்கும் சமயம் மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்; மயக்கு று மாயையின் மாமாயை விடு மயக்கிற் றெளியின் மயக்குறு மன்றே. (திருமந்திரம்) கள் உண்பவர் கருத்து அழிந்து கதியிழந்து ஒழிகின்ருர் எனத் திருமூலர் இவ்வாறு பரிந்து வருக்தி யிருக்கிரு.ர். படு கள்ளை விடு. என்றது படுதலே யுணர்ந்து விடுதலைபெற, மடமையால் மருவிய குடிப்பழக்கத்தைக் கடுமையா வெறுத்து விடு; விடாது கின்ருல் படாக பாடுகள் படுவாய், படுவதை எ திர விந்து அடு துயர் அகலுக. இளிவு நீங்கிவிடின் ஒளியும் உ யர்வும் ஓங்கிவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/247&oldid=1326413" இலிருந்து மீள்விக்கப்பட்டது