பக்கம்:தரும தீபிகை 4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1399 கேசு ஒழியும், நன்மைகள் எல்லாம் நாசமாய்ப்போம்; அல்லல் அவமானம் பழி பாவம் யாவும் பற்றிக் கொள்ளும், அக்குடி யை அடியோடு விட்டு விலகுக என்பதாம். குடியால் நேருகின்ற பழிகேடுகள் சில விழி தெரிய இதில் வெளிவந்துள்ளன. கள் அருந்துவ கால் அறிவு கெடுவதோடு பொருள் வலி புகழ் முகவிய எல்லாம் செடுகின்றன. கேக போகங்களை அனுபவிக்கவும் பிறர்க்கு உபகரிக்கவுமே பொருள் ஈட்டப்படுகிறது. உயிர் வாழ்க்கைக்கு இனிய சாதனமான அங்கப் பொருளைக் து ட | ட | ன கள்ளுக்குடியில் கொட்டுவது எள்ளத்தக்க இழிபழியாகிறது. 'கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.” (குறள்,935) நல்லபொருளைக் கொடுத்துப் பொல்லாத மதிமயக்கத்தை வாங்கிக் கொள்வது கொடிய மடமையான பெரிய மருள் எனக் கள் உண்பார் நிலைமையைக் குறித்து வள்ளுவப் பெருக்ககை இங்ங்னம் வருக்தி இரங்கியிருக்கிருர். அறியாமை யுடைத்தே! என்பதில் ஏகாரம் ஒலித்திருக்கும் ஒசையை உள்ளச் செவியால் ஒர்ந்து உணர்க. பரிவும் இரக்கமும் உரையில் பெருகியுள்ளன. புகழ் இன்பம் புண்ணியங்களைப் பெறுகற்கு உரிய in ** * - o: - - = .- | - - m - 睡 . பொருளைப் பழி துன்பம் பாவங்களைக் கருகின்ற கள்ளுக்குக் கொடுத்துக் குடிகாரர் அடியோடு கெடுகின்ருரே! என அடிகள் பரிகபித்திருப்பது மான மனிதர் ஈனமாயப் அழிவகை os ண் னி என்க. "ஞானம்மெய்ச் சுகம்புகழ் நலம்பெறத் தனம் தானமே செய்குவர் தகுதியோர்; அறி வினம்மெய் மறதி நோய் இழிவுறப் பொருள் வானென வழங்குவர் மதுவுண் போர்களே. (I) பாலினோத் தேனேயின் பாகை நீந்துவெண் மாலியை மாந்துவோர் மலர்கள் நீத்துமெய்த் தோலிர னந்தனேச் சூத கந்தனேக் கோலியுண்டுவக்கும் ஈக் கூட்டம் ஒப்பரே.” (நீதி நூல்) கள்ளைக் குடிப்பவர் இப்படி எள்ளப் பட்டுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/246&oldid=1326412" இலிருந்து மீள்விக்கப்பட்டது