பக்கம்:தரும தீபிகை 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1402 த ரு ம தீ பி. கை வேலையின்றி விட்டில் இருக்கும் போது சாதாரணமா வாழைத் தடையை வைத்துக் கொள்ளுவார். பள்ளியில் ஒரு நாள் பரீட் சை நடந்தது; பரீட்சகர் பிள்ளைகளிடம் கல்வி நிலைகளைக் குறித் துக் கேள்விகள் கேட்டார். அங்ங்னம் வினவி வருங்கால் பூமி யின் வடிவம் என்ன? என்ருர். பிள்ளைகள் சொல்ல முடியாமல் மறுகி நின்ருர். அந்த ஆசிரியர் மறைவாப் கின்று தன் பொடி டப்பியை எடுத்துப் பிள்ளைகளுக்குக் கெரியும்படி காட்டினர். தன் டப்பி உருண்டையாயிருத்தலால் அதனைக் கண்டு பூமியின் வடிவத்தை மாணவர் சொல்லி விடுவார் என்று அவர் கருதி நின்ருர். பிள்ளைகள் அவ்வாறு சொல்ல வில்லை; குறிப்பறிந்து கூறும் கூர்மையில்லாமையால் நேர்மையாகவே வேறே சொன் னர். பூமி பொடி டப்பி போல் இருக்கும்’ என்று இரண்டு பையன்கள் ஒருங்கே உரைத்தார். பரீட்சகர் திகைத்தார். அதன்பின் உண்மை தெரிந்தது; அவர் உள்ளம் நாணிப் போ ஞர். கல்வியறிவைப் போதித்து நல்ல பழக்கங்களை மாணவர்க் குப் பழகிக் கொடுக்க வுரிய ஆசிரியரே பொடியோடு பழகி இப்படிப் பொடியராயிருந்தால் உலகம் எப்படி உயர் நிலை அடையும்? ரி 'மூக்குக்கு அணி பொடியை மோவாமை.” என்று அவயவ அழகுகளைச் சுவையாக முன்னேர் சொல் லியிருந்தும் நாசியைப் பாழாக்கி நவை செய்து வருவது அவ கேடேயாம். கெடு நிலை தெரியாமல் படுதுயர் அடைகின்ருர். சிறிது பழகிய பொடிப் பழக்கம் இறுதி வரையும் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளுகிறது. மிகவும் பெரியவர்களும் பொடி யர் ஆனபின் அதிலிருந்து விலக முடியாமல் புலேயாடியுழலுவது உலக மையலாய் நிலையோடியுள்ளது. எல்லாவற்றையும் விட்ட துறவிகளையும் பொடி விடாமல் பற்றி வருகலால் அதிசயமான ஒரு கொடிய மாயையாய் அது கெடிதோங்கி வருகிறது. கன்னே ஒரு முறை தொட்டு மூக்கில் வைத்தவனை உயிர் இருக்கும் வரை யும் கன் போக்கில் அது வைத்துக் கொள்ளுகிறது. 'உண்ணும் உணவை மறந்தாலும் உரிய பொருளே மறந்தாலும் மண்ணும் மனேயும் மறந்தாலும் மகவும் உறவும் மறந்தாலும் பெண்ணும் பிறவும் மறந்தாலும் பிரிய மான புகையிலேயால் பண்ணும் பொடியை ஒருபோதும் பாரில் மறந்து வாழேனே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/249&oldid=1326415" இலிருந்து மீள்விக்கப்பட்டது