பக்கம்:தரும தீபிகை 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1404 த ரு ம தி பி ைக இடிமேல் விழுந்த இனிய மரம்போல் குடிமேல் விழுங்க குடியும்-படிமேல் இழிந்து படலால் இழிகுடியின் தீமை பொழிந்து வழியும் புறம். நல்ல குடியுள் கள்ளுக்குடி புகுந்தால் இனிய கனி மரத் தின் மேல் இடி விழுங்க படியாம். குடியை இடி என்றது அடி யோடு அழிக்கும் அதன் கொடுமையைக் கூர்ந்து தெரிய. அறிவைப் பாழாக்கி அவகேடுகளை விளைக்கும் கொடிய பானத்தை மனிதன் விழைந்து குடிப்பது தன் அழிவுக்கே வழி கோலிய படியாம். விழி நாடி அறிக. உள்ளத்தில் வெறிகளைக் கிளப்பி இழிந்த காம இச்சைகளை விளைக்கும் ஈனங்களைப் படிப்பதும் இழி கள்ளைக் குடிப்பது போல் எள்ளத்தக்கதே யாம். இந் நாட்டில் இக் காலத்தில் காலித் தாள்கள் பல கடுத்து வருகின்றன. அவற்றைப் படிப் பது அறிவைக் கெடுப்பதாம். வெறி மயக்கங்கள் வினப் பிலுக் குகளாய் விரிந்து வெப்ப மயப்யல்கள் புரிந்து நிற்கின்றன. ஆனந்தம் தரும்என்றும் அறிவுகிலே வரும் என்றும் ஆசை காட்டி ஊனங்கள் கலித்துள்ளே ஒருபயனும் இல்லாமல் உலாவும் தாள்கள் ஈனங்கள் விளைத்துவரும் இயல்நோக்கி அறிஞரெல்லாம் இரங்கு கின்ருர் பானம்தான் என்ருலும் கள்ளருந்தல் பழியன்ருே பாவம் உண்டே. (இந்தியத்தாப் நிலை) கவியின் கருத்தைக் கருதி நோக்கி உறுதி கானுக. மாலான மயக்கங்களைப் படிப்பது மாலியைக் குடிப்பது போலாம். நல்ல பாலை நயந்து பருகுவது போல் இனிய நூலை உவந்து கருதுக. மாலி= கள். மயக்கம் தருவது என்பதாம். படிப்பதை ஒர்ந்து படி, குடிப்பதைக் கூர்ந்து குடி. உடலுக்கு உரம், உணர்வுக்குத் தெளிவு, உயிருக்கு .இன் பம் பெருகி வரும்படி எவ்வழியும் கருதி இகமாய் ஒழுகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/251&oldid=1326417" இலிருந்து மீள்விக்கப்பட்டது