பக்கம்:தரும தீபிகை 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1408 த ரு ம தி பி ைக உணர்வும் செயலும் மண்டிவருகின்றன. கள்ளுக்குடியர் எவ் வழியும் எள்ளப்படுகின்றனர். அறிவைப் பாழாக்கி விடுதலால் அங்கப்பழிநீரை க்குடிப்பவர் இழிமக்களாயிழிந்து நிற்கின்றனர். உயர்ந்த குடியில் பிறந்திருக்காலும் குடிப் பழக்கத்தால் இழிந்து படுகின்றனர். பழிவழியில் பழகி ஒருமுறை இழிந்தவர் மீண்டு தெளிந்து மேலே உயர்ந்து வருதல் மிகவும் அருமையாம். தமக்கு இழிவு நேராமல் காத்து வருபவரே விழுமிய ர்ேத் தியை மேவி உயர்கின்றனர். உண்மை ஒழுக்கம் பாண்டும் உறுதி நலங்களை உதவி அரிய பெருமைகளே அருளி வருகிறது. இங்கிலாந்து தேசம் மிகுங்க குளிர்உடைய அ. அங்கு வசிப் பவர் குடிப்பது வழக்கமாயுள்ளது. ஒயின் (Wine) என்னும் ஒரு வகை மதுவை யாவரும் பருகி வருகின்றனர். குளிரை நீக்கிச் சிறிது சுறுசுறுப்பைக் கொடுக்கலால் அதனைக் குடிப்பது இயம் கை வழக்கமாயது. இந்நாட்டுக் கள் சாராயங்களைப் போல் அது அவ்வளவு கொடியது அன்று. அதனையும் குடியாமல் இருப்பதே புனிதமான இனிய வாழ்வு என்று அங்காட்டிலுள்ள மேலோர் கருதியிருக்கின்றனர். சமீபத்தில் காலம் சென்ற பெர்நாட்ஷா (Bernardshaw) యోT ன்னும் புலவர் பப் து அருக்கார்; புலால் உண்ணுர். சுக்கமான உணவுகளை உண்டு பரிசுக்கவாழ்வு நடத்திஞர் என இவாைக் குறித்து அக்காட்டவர் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர். குடிப்பது இயல்பாகவுள்ள நாட்டிலும் குடியாகவர் உயர்வாக மதிப்பட்டுள்ளார். சீலமுள்ள மேலோர் குடியார் என ஆங்கிலக் கவிஞர் ஆன LÉláv - zpıth (Milton) கூறியிருக்கிரு.ர். அவர் சொல்லி யிருப்பதை அயலே பாருங்கள். “The lyric poet may drink wine, but the epic poet, must Jrink water.’’ (Milton)

சாதார ணக் கவிஞன் மதுவைக் குடிக்கலாம்; ஆனல் சிறந்த காவியம் பாடுகின்ற உயர்ந்த கவிஞன் தண்ணிரைத்தான் பருகவேண்டும்” என அவர் உறுதி கூறியுள்ளார். இது ஈண்டு எண்ணி யுனா வுரியது. மது இழிந்தது; ஈனமுடையது, அதனே உண்ணுதவரே உயர்ந்த உறுதி கலங்களை அடையவுரியவர் என் பதை மேலோர் யாவரும் யாண்டும் தெளிந்து மொழிந்துள்ளனர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/255&oldid=1326421" இலிருந்து மீள்விக்கப்பட்டது