பக்கம்:தரும தீபிகை 4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1409 உணவின் படியே உணர்வு படிகிறது. தேக கத்துவங்கள் அதிசய விசித்திரங்களாயுள்ளன. நல்ல 房凸 тар உடல் அாப்மை யடைகிறது; நல்ல உணவால் உள்ளம் தெளிவுறுகிறது. புறத்தே மருவியவகையே அகத்தே கருவி கரணங்கள் உருவாகி வருகின் றன. காரணம் காரியத்தில் கெரிதல் போல் உணவு உணர்வில் தெரிகிறது. “As he eats, so he thinks.” (Emerson) 'உண்ணுகிற படியே மனிதன் எண்ணுகிருன்' என எமர் சன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உள்ளே கொள்வதை நல்ல நீர்மை யுடையதாக் கருதிக் கொள்ளின் அந்த மனிதவாழ்வு எவ்வழியும் இனிமை சுரங்து செவ்விய நீர்மையோடு சிறந்து வருகிறது. பொல்லாதது புகின் புலையாய் அல்லல் புரிய நேர்கின்றது. “Be not among winebibbers; among riotous eaters of flesh.” (Bible) 'மது உண்போர் அருகும் புலால் புசிப்போர் இடையும் மருவி யிராதே' என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. சுராபானம் அசுரத்தன்மையைத் தருதலால் அதனைப் பருகி னவர் மதிகேடராய் அவல நிலைகளையே அடைகின்றனர். "ஆஸ்-ரிம் யோகிம் ஆபங்கா மூடா ஜக்மகி ஜந்மகி மாம் அப்ராப்ய ஏவ கெளந்தேய ததோ யாக்தி அதமாம் கதிம். (இதை,16-20) 'அருச்சுளு ஒருமுறை அசுரயோனியை அடைந்தவர் | | பின்பு பிறவிகள்தோறும் மூடர்களாய் என்னை அடையாமல் இழிநிலைகளையே அடைகின்றனர்” எனக் கண்ணன் இவ்வாறு விசயனிடம் உரைத்திருக்கிருன். கள்ளுக்குடியர் கையிலுள்ள பொருளை எல்லாம் போக்கிப் பின்பு தெய்வ சம்பத்தையும் இழந்து வெப்ப துயரங்களில் விழ்ந்து வருந்துவார் என்பதை இகளுல் ஒர்ந்து 'உணர்ந்து கொள்ளுகிருேம். உணர்வை அழித்து உயிர்க்கேடு செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/256&oldid=1326422" இலிருந்து மீள்விக்கப்பட்டது