பக்கம்:தரும தீபிகை 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1411 உண்பது சுகமாய் உயிர் வாழ. அங்ங்னம் உயிரின் ஆதார மான உணவு இழிவும் பழியும் உடையது ஆயின் அந்த மனிதன் இழிந்து பழிபட நேர்கின்ருன். வாழ்வைப் பாழாக்கித் தாழ்வு படுத்துகிற ஈன பானமாய்க் கள் இழிக்கப் பட்டுள்ளது. அவ் வாருன இழிவை உண்பவன் எவ்வாற்ருனும் இழிந்தே படுவன் ஆதலால் அதனை ஒழிக் த ஒழுகிய அளவு உயர்ந்தவனகின்ருன். உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்ருேரான் எண்ணப் படவேண்டா தார். (குறள், 922) மனித சமுதாயத்துக்கு மதிநலம் கூறியுள்ள இந்தப் புனித வாசகம் ஈண்டு துணுகி யுணர வுரியது. கள்ளைக் குடியாதே; குடிக்க விரும்பினல் குடித்துக் கொள்; ஆனல் நீ ஒரு மனித ஞக மேலோரால் எண்ணப்பட மாட்டாப்!” எனக் குடிகாரனே நோக்கித் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உயர்ந்த மனிதப் பிறவியின் மாட்சியை அடியோடு கெடு த்து இழிந்த மிருகத்தினும் ஈனம் ஆக்கி விடுகிற இழி கள்ளை ஒருவன் விழி மூடிக் குடிப்பது எவ்வளவு பழி எத்துணை அழிவு என்பதை இதல்ை உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். ஈனக் குடியால் இழிபழிகள் ஏறுமே ஊனம் ஒழிக. வுடன். இந்த ஞான மொழியை நாடித் தெளிக. 607. உயிரோ டிருந்தாலும் உற்றசவம் என்றே செயிரோ டிகழ்ந்து சிரிக்கும்-வயிருேடு கள்ளுடை யானேக் கடல்ஞாலம் ஐயகோ எள்ளல் இதன்மேல் எது. (எ) இ-ள் கள் அருந்துகின்றவன் உயிரோடு இருந்தாலும் அவனைச் செத்த சவம் என்றே உலகம் எள்ளிச் சிரிக்கும்; அங்கோ! இது எவ்வளவு நிங்தை சிந்தனை செய்து சிறுமை ஒழிக. உணர்ச்சியோடு இருக்கும் வரையும் மனிதன் உயர்ந்து திகழ்கிருன்; அது ஒழிந்து போனல் இழிந்த மிருகமாப் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/258&oldid=1326424" இலிருந்து மீள்விக்கப்பட்டது