பக்கம்:தரும தீபிகை 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1413 காழக மீக்கொண்டு ஆழும் தானேயன் வாழ்க வாழ்க எம் மதில் உஞ் சேனே மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத் துட்டக் கிளவி பெட்டவை பயிற்றி முட்டின் றியம்பும் பட்டினம் ஒரீஇத் துறக்கம் கூடினும் துறந்திவண் நீங்கும் பிறப்போ வேண்டேன் யான் எனக் கூறி ஆர்த்த வாயன் ஊர்க்களி மூர்க்கன் செவ்வழிக் தேம் சிதையப் பாடி அவ்வழி வரும்ஒர் அந்தணுளனேச் செல்லல் ஆனே கில் இவண் எேன எய்தச் சென்று வைதவண் விலக்கி வழுத்தினேம் உண்ணும் இவ் வடிநறுங் தேறலேப் பழித்துக் கூறும்கின் பார்ப்பனக் கனமது சொல்லா யாயின் புல் லுவென் யான் எனக் கையலைத்து ஒடும் ஒர் களிமகன்.” (பெருங்கதை, 40) ஒரு குடிகாரன் செயலே இது படி எடுத்துக் காட்டி யிருக்கிறது. கவியின் காட்சிகளைக் கருதி உணர்க. நான் உவந்து குடிக்கிற கள்ளை உன் இனம் இகழ்ந்து சொல்லுகிறது; ஆதலால் உன்னே இன்று விடேன் என ஒரு வேதியனே அவன் வேதனை செய்திருக்கலை வியந்து காணுகிருேம். விபரீதமா ன செயல்களை யெல்லாம் வெறி விளேத்து விடுகிறது. வயிருேடு கள் உடையான் உயிரோடு இருந்தாலும் சவம். கள் அருந்திய பொழுது அறிவு அழிந்து படுகிருன், படவே யாதும் அறியாதவனுய்த் தீதுகளைச் செய்து அயர்ந்து கிடக்கி முன். நோக்காடான அக்கிடை சாக்காடு ஆகின்றது. கள் குடலுள் புகுந்தவுடன் உடல் பினமாய் விழுகிறது; உயிர் துயருள் புகுத்து உழலுகிறது. வயிறு ஒடு கள் எ ன்றது உயிரைத் துயரில் ஒட்டிச் சாக அடிக்கும் அதன் வேகம் தெரிய வந்தது. நறவால் அறிவு அழிகிறது; ஆவி ஒழிகிறது. உயிர் இருந்தாலும் மனிதனைச் செத்த சவம் ஆக்கிச் சீர ழிக்கும் திய கள்ளை வாயில் வைப்பது எவ்வளவு தீமை எத்தனை மடமை எத்துணை அழிவு உய்த்துனர்ந்து தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/260&oldid=1326426" இலிருந்து மீள்விக்கப்பட்டது