பக்கம்:தரும தீபிகை 4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1416 த ரும தி பி ைக அரியை அவிக்கு முன்னம் எழுந்து அயல் கட்கடைக்குட் புகுந்ததுவேஃ. (நீதி நூல்) குடியனைக் குறித்து வந்துள்ள இக் கவியின் பொருளைக் கூர்ந்து நோக்கின் அதன் கொடுமையை ஒர்ந்து உணர்ந்து அவனது கிலேமையைத் தேர்ந்து கொள்ளலாம். கள் உண்போர் உள்ளவரை பேரிழவே. குடிகாாருடைய பாரிழவை இது பரிந்து காட்டியுள்ளது செத்த சவம் அன்றே ஒழிந்து போம்; கள்ளுக் குடியர் நித்தமும் பினங்களாப் விழுந்து நாட்டுக்குள் நாளும் இழவு கூட்டி வருகின்றனர்; அந்த நீசப் பினங்கள் தேசத்துக்குக் கொடிய நாசங்களாயுள்ளன. குடி உயிரோடு உன்னைப் பிணமாக்கி விடும்; அதனை யாதும் அனுகாதே; தீதான அதனே ஏதும் விழையாதே; எவ்வழியும் உணர்வோடு யாண்டும் உறுதி நலனே ஒர்ந்து ஒழுகுக. கள்ளைக் குடித்துக் கடைப்பினம் ஆகாதே உள்ளம் தெளிக உணர்ந்து. 609. உள்ளநலம் எல்லாம் ஒழித்துப் பழிவளர்த்து வெள்ளமென அல்லல் விளேக்குமே-கள்என்னும் பாவியொடு சின்னுள் பழகின் படுதுயரம் ஆவியொடும் ஆழ்த்தும் அளறு. (கூ) இ-ள் கள் உண்பதால் உள்ள நலங்கள் எல்லாம் ஒழிந்து போம்; பழியும் அல்லல்களும் விளைந்து வரும், கள் எ ன்னும் பாவியோடு சில நாள் பழகினுலும் ஊழியும் நீங்காதபடி உயிர் நரகத்தில் அழுகதும எனக. அறிவு செல்வம் புகழ் என்னும் இவை உயர்ந்த உயிர் வாழ் வின் ஊதியங்களாய் அமைந்திருக்கின்றன. இக்க இனிய உறுதி நலங்களைப் புனிதமாகப் போற்றி வருபவன் மனிதருள் உயர்ந்து மகிமை மிகப் பெறுகின்றன். இருமையும் இன்பம்தரவல்ல இந்த அருமைப் பொருள்கள் சிறுமைச் செயல்களால் சீரழிந்து போ கின்றன. இழி களியால் கொடிய அழிவுகள் கடிது விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/263&oldid=1326429" இலிருந்து மீள்விக்கப்பட்டது