பக்கம்:தரும தீபிகை 4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. புன் ைம 1427 கருதிப் பிழையான பழி மொழிகளைப் பேசிவரின் அவர் இழி மக்களாய்க் கழிவுறுகின்றனர். உள்ளம் ஊனமாய்ச் சிறுமை அடைந்த பொழுதே அதனே யுடைய மனிதன் ஈனமாய் இழி வுறுகின்ருன். ஈனம் நேராமல் ஒழுகுவதே ஞானமாம். உயர்ந்த எண்ணங்களையே எண்ணித் தன் உள்ளத்தை எந்த மனிதன் பண்படுத்தி வருகிருனே அவன் செவ்விய மேன் மையாளனுப்த் திவ்விய மகிமை பெறுகிருன். உள்ளம் உயரவே எல்லா உயர்வுகளும் அங்கே வெள்ளமாப் விரைந்து வருகின் றன; வரவே உலகமெல்லாம் அவனை உவந்து நோக்கி வியந்து கொண்டாடுகின்றது. துன்பங்கள் நீங்கி எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும்; அதற்கு வழி யாண்டுளது? என்று மூண்டு முயன்று நீண்டு நின்ற அந்த ஒரே எண்ணம்தான் புத்தரை உலகம் எல் லாம் உவந்துதொழுது புகழ்ந்துபோற்றும்படி உயர்த்தியுள்ளது. 'எல்லாரும் இன்புற் றிருக்க கினைப்பதுவே அல்லாமல் வேருென்று அறியேன் பராபரமே.” தாயுமானவர் கினேந்துள்ள நினைவு நிலையை இதில் நேரே கண்டு நாம் நெஞ்சம் களிக்கின்ருேம். இவ்வாறு பெரிய எண் ணங்களை எண்ணிவருகிறவர்களே பெரிய மகான்களாய்ப்பெருகி வருகின்றனர். நல்ல சிந்தனை எல்லா தலங்களையும் அருளுகிறது. சின்ன நினைவுகளை நினைந்து சிறியவனுயிழிந்து போகாதே; பெரிய சிந்தனைகளைச்செய்து அரிய மகானப் உயர்ந்துகொள்ளுக. -moo – = - 618 குலாலமே பேசிக் குதிப்பார் தமது நிலையறியார் மேலென்று நீள்வார்-தலைமையெதில் என்பதையும் எண்ணுர் இழிகிலேயே கண்டுபுல்லர் துன்பமுற நிற்பர் தொடர்ந்து. (б.) இ-ள் உயிரின் உண்மை நிலைகளை ஊன்றி உணராமல் உடலளவில் ஒட்டியுள்ள சில புன்மைகளைப் புகழ்ந்து பேசி வியந்து செருக்கி அல்லல்கள் அடையவே புல்லர்கள் பொங்கி நிற்பர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/274&oldid=1326440" இலிருந்து மீள்விக்கப்பட்டது