பக்கம்:தரும தீபிகை 4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1426 த ரும தி பி ைக உழந்துவருபவரே இழிந்தவராயுள்ளனர். புன்மக்கள், நன்மக்கள் என்னும் வழக்கு புன்மை நன்மைகளின் புலன் தெரிய வந்தது. கீழான தன்மைகளை யுடையவர் கீழோர். மேலான நீர்மைகளை மேவினவர் மேலோர். கீழ்மை மனிதனை ஈனமாத் தாழ்த்தி இழிவுபடுத்துகிறது. மேன்மை அவனே மேலாக உயர்த்தி மகிமை புரிகிறது. ஈன இயல்புகள் மனிதனேக் கீழோன் ஆகத் தாழச் செய்த லால் அந் நவைகளை ஒழித்த அளவு அவன் உயர் நிலையை அடை கிருன்..இனிய பண்பு பெருமை தருகிறது; இன்னதது சிறுமை - தங்து இருமையும் கெடுக்கிறது. "கீழ்மை அகற்று.” என ஒளவையார் இவ்வாறு அருளியிருக்கிரு.ர். இழிபுன்மைகளை ஒருவி உயர் சன்மைகளைத் தழுவி ஒழுகுக. _ 613 சின்ன கினேவால் சிறியர் எனவிளிவர் உன்னம் உயரின் உயர்ந்துமே-அன்னர் பெரியரென இந்தப் பேருலக மெல்லாம் தெரிய வருவர் தெளி. (உ) இ-ள் சிறிய கினேவுகளை யுடையவர் சிறியராய்ச் சிதைந்து திரிகின் ருர்; பெரிய எண்ணங்களை யுடையவர் பெரியராய் உயர்ந்து அரிய மகிமைகளோடு உலகம் புகழ ஒளி செய்துள்ளனர் என்க. உன்னம்=நினைவு. உள்ளத்தில் ஊன்றி கினைப்பது உன் னம் என வந்தது. உன்னிய வாழ்வு மன்னிய மகிமையாம். புறத்தே கோன்றுகிற சிறுமை பெருமைகளுக்கு மூலகார னங்கள் அகத்தே மருவி யிருக்கின்றன. அகமே புறம்; மனமே மனிதன் என்னும் பழமொழிகள் விழுமிய பொருள்களுடையன. இனிதா எண்ணிவரும் அளவுக்கு அந்த மனிதன் கண்ணிய மடைந்து புண்ணிய வாழ்வு பெற்று வருகிருன். சின்ன நினைவு என்றது இழிந்த எண்ணங்களை. பிறருடைய குற்றங்களையும் குறைகளையுமே எவ்வழியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/273&oldid=1326439" இலிருந்து மீள்விக்கப்பட்டது