பக்கம்:தரும தீபிகை 4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்திரண்டாம் அதிகாரம் புன் ைம. அஃதாவது புல்லியதன்மை. உயர்ந்த சிந்தனைகளே இழந்து சிறிய செயல் இயல்களில் வறிதே இழிந்துழலும் அற்பரது இளி கிலேயை உணர்த்துகின்றமையால் புலையான களியின்பின் இது வைக்கப்பட்டது. களிப்பும் இளிப்பும் களேந்து வாழுக. 611 இழிந்தோர் உயர்ந்தோர். எனவே உலகில் வழிந்து மனிதர் வருதல்-பொழிந்துவரும் ஈன இயல்பால் எழிலுயர்வால் எய்தினகாண் ஊனம் தெளிக வுணர்ந்து. (க) இ-ள் உயர்க்கோர் தாழ்ந்தோர் என இவ்வுலகில் மனிதர் உலாவி வருகின்றனர். அவ்வரவுகள் இயல்புகளால் அமைந்தன. இழி வான புன்மைகளையுடையவர் இழிந்தவராய் உழல்கின்ருர், உயர் வான தன்மைகளையுடையவர் மேலோராய் உயர்ந்து திகழ்கின் ருர்; இவ்வுண்மையை உணர்ந்து நன்மை தெளிக என்பதாம். இது உயிர் வாழ்வின் நிலைகளை உணர்த்துகின்றது. மனிதன் மகிமை மிக வுடையவன். அளவிடலரிய சீவ கோடிகளுள் இவனுடைய நிலைமை தலைமை வாய்ந்துள்ளது. குண நலங்களும் உணர்ச்சிகளும் இவனை மேன்மைப் படுத்தி வருகின்றன. அவை நல்லனவாயின் இ வ னு ம் நல்லவனப் உயர்ந்து விளங்குகிருன்; அல்லனவாயின் பொல்லாதவளுப் இழிந்து திரிகிருன். இயல்பின்படி for யர்விழிவுகள் படிகின்றன. இழிவு என்னும் சொல் ஈனம் கேடு தாழ்வு குற்றம் கீழ்மை முதலிய நிலைகளை உணர்த்திவரும். இந்தப் பழி வழிகளில் படிங் தவர் இழிந்தவர் என விழி தெரிய வந்தனர். எண்ணங்களும் செயல்களும் இழிவானபொழுது அவன் இழிமகன எண்ணப் படுகிருன். நெஞ்சம் தாழ கிலை காழ்கின்றது. H கீழோர், தியோர், கடையர், கயவர் என இன்னவாறு எண்ணப்பட்டு இழிந்துள்ளவர் யார்? உயர்ந்த எண்ணங்களையும் சிறந்த பழக்க வழக்கங்களையும் இழந்துபோய் ஈன நிலைகளில் 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/272&oldid=1326438" இலிருந்து மீள்விக்கப்பட்டது