பக்கம்:தரும தீபிகை 4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1432 தரு ம தி பி கை பதவி என்றது அதிகார நிலையினை. நாலுபேருக்கு மேலா ளாய்த் தலைமையாய் கின்று காரியங்களை நடத்தும் பொறுப்பு மனிதனுக்குச் சிறப்பாய் அமைந்துள்ளது. அந்த அதிகார பதவி தகுதியானவரிடம் அமைந்திருந்தால் எல்லாருக்கும் நல்ல தாய் இகம்புரிந்து வரும், தகாதவர்.பால் நின்ருல் அல்லலாப் விரிந்து அவமதிப்பே தரும். உயர்ந்த பதவி இழிந்தவர் கையில் புகுந்தால் எவ்வழியும் இன்னலாப் இழிவுகளே விளையும் ஆதலால் அங்கப்புல்லரது புலே நிலை உலகிற்கு அல்லலாயது. உள்ளம் சிறுமையா யிழிந்துள்ள மையால் அவருடைய செயல்கள் தவறுகளுடையனவாய்க் தாழ்வுற நேர்ந்தன. மாதேவன் ஆக மதித்துமே. என்றது புல்லரது மனச் செருக்கை உணர்த்தி நின்றது. 'அம்பர்க்கு வாழ்வுசற்று அதிகமானல் விழிக்கு யாவர் உருவும் தோன்றிடாது; அண்டிகின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது; முற்பட்ச மானபேர் வந்தாலும் வாருமென மொழியவும் வாய் வராது; மோதியே வாகப் பிடிப்புவந்தது போல முன்காலே அகல வைப்பார்; விற்பன மிகுந்தபெரி யோர்செய்தி சொன்னலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார்; விருதா மகத்துவப் பேயது சவுக்கடி விழும்போது தீரும் என்பார்.” அற்பருக்கு அதிகார வாழ்வு வங்கால் மதி கேடராய்க் களித்து அவர் படும்பாடுகளை இப் பாட்டு ஒரளவு காட்டியுள் ளது. அனுபவக் காட்சிகள் யாவருக்கும் தெளிவாய் இனிமை சுரக்கு வருகின்றன. புல்லர் செயலால் புலைகள் தெரிகின்றன. புன்மையாளன மூதேவிமகன் என்றது ஈன நிலைகளில் களித்து வினச் சேட்டைகள் செய்யும் விதம் தெரிய. கீழோர் மூகேவி மக்களாய் இழிந்துழல்கின்ருர்: மேலோர் ேேதவிமக்க ளாய்ச் சிறந்து திகழ்கின்ருர். இழிவு காணுமல் உயர்வு கானுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/279&oldid=1326445" இலிருந்து மீள்விக்கப்பட்டது