பக்கம்:தரும தீபிகை 4.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1480 த ரு ம தி பி ைக வெம்மையாக்கி விடுதல்போல் கோபம் மனத்தைக் கொதிக்கச் செய்கிறது. செய்யவே வெய்ய துயரங்கள் விரைந்து விளைந்த விடுகின்றன. விளையவே இனிய வாழ்வு இன்னதாயிழிகின்றது. அறிவு குலேய, அமைதி அழிய. என்றது கோபத்கால் விளையும் தீமைகளைக் கூர்ந்து ஒர்ந்த கொள்ள வக்கது. மானச மருமங்கள் அதிசய விகுேதங்களாப் உள்ளன. தீப ஒளிபோல் அறிவு யாவும் கெளியச் செய்கிறது. அக்க ஒளியில் வளர்ந்து வரும் வாழ்வு எவ்வழியும் இன்பமும் புகழும் எப்தி வருகின்றன. உயிர்க்கு பாண்டும் ஒளி புரிந்து உதவி செய்து வரும் அறிவு வெகுளியால் விளிந்துபடுகிறது; அது படவே இருளும் மருளும் பெருகி அழிவுகள் நேர்கின்றன க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்மிருதி விப்ரம: ஸ்மிருதிம்ப்ரசாத் புத்தி காசோ புத்திநாசாத் ப்ரனசியதி. (கீதை, 2-68) 'கோபத்தால் மயக்கம் உண்டாகிறது; அக்க மயக்கத்தால் நினைவு கடுமாறுகிறது; அக் கடுமாற்றத்தால் அறிவு கெடுகிறது; அக் கேட்டால் அழிவு நேர்கிறது” என்னும் இது இங்கே அறிய வுரியது. குரோதம் விரோதங்களை விரித்து வெந்துயர் விளைக்கிறது. தனக்கு உறுதியை நாடி உப்தியைத் தேடுகிற மனிதன் இத்தகைய கொடிய கோபத்தை யாதும் கூடலாகாது எனக் கண்ணன் விசயனுக்கு இவ்வாறு போதித்திருத்தலால் வெகுளி எவ்வளவு பொல்லாத ஆன்மவிரோதி என்பது புலளுப் நின்றது. "எரிகிகர் வெகுளி பொங்க மயக்கம் வந்தெய்தும்; எய்தத் தெரிபவை சிதையும்; உள்ளம் தெரிந்தவை சிதைந்த போதே உரியதன் உணர்வு மாயும்; உணர்வுமாய்ந்து ஒழிந்த வாறே அரிய என்று அறிஞர் பேசும் அனேத்தும்மாய்ந்துஒழியுமன்றே.” மேலே குறித்த கீதையின் மொழி பெயர்ப்பாய் இது வந்துள் ளது. மானச தத்துவங்களே உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். அறிவைப் பாழாக்கி அவலக் கேடுகளை யெல்லாம் ஒருங்கே விளைக்கும் கொடிய சேமுடையது ஆதலால் கோபத்தைக் கடிடது கடித்து ஒழுகவேண்டும். சினம் ஒழியின் சீர்மை விளையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/327&oldid=1326493" இலிருந்து மீள்விக்கப்பட்டது