பக்கம்:தரும தீபிகை 4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 1483 எதிர்த்து யாதும் செய்ய முடியாது, தெய்வமே கதி என்.று வைது கோவர்; அந்தப் பாவத்தால் நரக துன்பம் உண்டாம்; ஆகவே யாவரி: மும் எவ்வகையிலும் கோபம் கொள்ளலாகாது எனச் சிவப்பிரகாசர் இங்ஙனம் கூறியிருக்கிரு.ர். மேலே குறித்துள்ள திருக்குறளுக்கு ஒரு தெளிவான விரி வுரை யாப் இது விளைந்து வந்துள்ளது. பொருளின் உண்மைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளுக. வலியோர்மேல் வரும் வெகுளி மறித்துடனே தமைக்கெடுக்கும் வறிதே கோபம் மெலியோர்மேல் வரில் இகத்தில் வெம்பழியும் பேல் நரகும் விளேக்கும் அல்லால் கலிவோர்தம் உவப்பினுக்கும் நகைக்கும் எய்தும் கேடினிய நட்பும் மாற்றும் புலியோகம் பசுவினம்போல் பல்காமை அதன் சினத்தின் பொருட்டால் அன்ருே. (பிரபோத சந்திரோதயம்) கோபம் எ வர்மீது செய்தாலும் இமையே; இம்மையில் பழி துயரங்களை விளைத்து மறுமையில் அழி நாகையும் அது கொடுத்து விடும். அதனைக் கொண்டவர் காசமே அடைவர் என இது குறித்துள்ளது. இதுவும் முன்வந்த திருக்குறளையே கருதி வங் துள்ளது. கருத்துக்கள் விரித்து நயமாக் காட்டப்பட்டுள்ளன. நாட்டில் பசுக்கள் பெருகி யிருக்கின்றன, காட்டில் புலி கள் அருகி யிருக்கின்றன, அதற்குக் காரணம் அவற்றின் கொடுங் கோபமேயாம் என இந்நூலாசிரியர் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. யோகம் = கூட்டம். கொடிய பாபத் தீமை யுடையது ஆதலால் கோபம் குல நாசம் செய்யும் என்று குறிக்க சேர்ந்தது. எவ்வழியும் வேதனை களை விளைத்து வரும் தீமையை விலக்கி யாண்டும் நன்மையில். உயர்க, சினம் ஒழியின் இனம் விளையும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/330&oldid=1326496" இலிருந்து மீள்விக்கப்பட்டது