பக்கம்:தரும தீபிகை 4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1500 த ரும தீபிகை ன்ன்னே இப்படி வைதானே! என்று எல்லாரும் கேட்கும்படி துள்ளிக்குதித்து எள்ளிச் சொல்லி எதிர்த்துச் சீறிக் கொதித்துத் திட்டுவது கீழோர் இயல்பாம் என இது குறித்துள்ளது. எவ்வழியும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே செவ்விய மேலோராய்ச் சிறந்து திகழ்கின்ருர், கோபம் குன்றின் அவன் குணக் குன்றமா யுயர்ந்து மகிமை பல பெறுகின்ருன். சினம் மூளாமல் காத்தவரே நாளும் கலம் பெறுவார். என்றது சித்தசாங்தியால் விளையும் நன்மைகளை உப்த்துணர வந்தது. அரிய பல மேன்மைகள் அமைதியால் அமைகின்றன. உள்ளே வெகுளி ஒழியின் உயர்கலங்கள் வெள்ளம் எனவே வரும். இதனே உள்ளி யுணர்ந்து உறுதி கானுக. 640. பொறுமை அமிர்தம் புசித்துப் புனித மறுமை மருவி மகிழ்வார்-சிறுமைச் சினமென்னும் தீகஞ்சைத் திண்டார் தெளிந்த மனமன்னும் மாட்சி யவர். (ά) இ-ள் பொறுமை ஆகிய அமுகத்தைப் பருகி மறுமை நிலையை மருவி மகிழும் மாண்புடையவர் சினம் ஆகிய திய சஞ்சைக் கனவிலும் அனுகார் என்க. இனிய அமிர்தம் எனப் பொறுமையையும், கொடிய சஞ்சு எனக் கோபத்தையும் குறித்தது அவற்றின் நீர்மை நிலைகளை உணர்ந்து கொள்ள, அமிர்தம் உண்டவர் இன்பம் மிகவுடைய ராப் நெடிது வாழ்ந்து வருகின்றனர். பொறுமை கொண்ட வரும் அவ்வாறே புகழ் இன்பங்களே மருவி உயர்க் து வாழ்கின் முர், நஞ்சைக் குடித்தவர் துயரமாப் காசத்தை அடைகின்ருர்; அவ்வாறே கோபத்தை மடுத்தவர் ஆபத்தை அடைந்து அவல மாப் அழித்து போகின்ருர், சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். (குறள்,306)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/347&oldid=1326513" இலிருந்து மீள்விக்கப்பட்டது