பக்கம்:தரும தீபிகை 4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. கோபம் 1501 சினத்தின் தீமையைக் குறித்துத் தேவர் இவ்வாறு உணர்த் தியுள்ளார். சேர்ந்தாரைக் கொல்லி என்று கோபத்திற்கு ஒரு பெயரைக் கொடுத்திருக்கிருர் பெயர் சூட்டியுள்ள அழகு உவகையை ஊட்டி வருகிறது. வினையும் விளைவும் வியப்பை விளைத்து கிற்கிறது. உலகத்தில் உள்ள தி தான் தொட்டதை மட்டும் சுட்டு எரிக்கும்; கோபத்தி தொடாததையும் அழித்து, ஒழிக்கும் எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. தனக்குச் சேமத்துணையாய் கின்று நல்ல உறுதி நலங்களைக் கூறி வரும் உரிமைச் சுற்றத்தையும் இழந்து கோபி கொடுக் துயரங்களை அடைந்து அழிந்து போவான் என்றகளுல் கோபத் தின் நாச வேலைகளை நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். எவ்வழியும் இவ்வாறு அழிதுயரங்களையே செய்யும் வெகுளியை மனிதன் தழுவி அழிவது மாயவியப்பா யுள்ளது. தனக்கு வருகிற இன்ப துன்பங்கள் எல்லாம் தான் செய்த வினிேயின் பயனுகவே விளைந்து வருகின்றன. பிறர் இகழ்ச் தாலும் புகழ்ந்தாலும் இன்பம் புரிந்தாலும் துன்பம் செய்தாலும் அவை யாவும் தனது கருமங்களின் மருமங்களேயாம். இந்த உண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால் பிறர் மேல் எந்த வகையிலும் வெகுளாமல் அமைதியாய்ச் சிந்தை அடங்கி யிருப் பான். சினங்து சீறும்படியான செயல்களை அயல்கள் செப் தால் அவை தனது வினையின் விளைவுகள் என நினைந்து தெளிந்து கொள்வது சினத்தை நீக்கு வதற்கு ஒர் சிறந்த வழியாம். தன்.அரு குறுசேய் சிரத்து ஒர் அங்குலியால் தான்புடைத்து ஒருவன்மீது ஒருவன் சொன்னமாத் திரத்தின் அவனே அச்சேயும் அணிவுகொடு எழுந்தறை குதல்போல் முன்னவன் விளையாட் டாயஐந் தொழிற்கு முன்னிலே யாயசீவரைப் பார்த்து இன்னல்செய் சாபம் இட்டுமா தவரும் என்கோலோ தவம் இழப் பதுவே. (வைரசக்கியதீபம்) இறைவன் மறைவாப் நின்று வினைப்பயன்களைச் வேர் களுக்கு ஊட்டிவருகிருன். இந்த இரகசியத்தை உணர்ந்து கொள்ளாமல் தமக்குப் பிறர் பிழை செய்தார் என்று வெகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/348&oldid=1326514" இலிருந்து மீள்விக்கப்பட்டது