பக்கம்:தரும தீபிகை 4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1509 நலன் ஒன்றையும் நாடி அடையாமல் புலன்வழியே இடி அலைந்தால் அந்த வாழ்வு பழியுடை யதாப்ப் பாழ்படுகின்றது. உயர்ந்த குறிக் கோளில்லாதது இழிந்ததாய் அழிந்துபோகிறது. துன்பக் கொடர்புகள் நீங்கி என்றும் கிலையான இன்ப கலனே அடைய நேர்ந்தவர் புலன்களை அடக்கியே உயர்ந்திருக் கின்றனர். இழிந்த இச்சைகள் ஒழிக்க பொழுதுதான் உயர்ந்த மேன்மைகள் ஒளிசெப்து வருகின்றன. 'புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி கல மந்த மில்லது ஒர் காடு புகுவிர்!' (திருவாய்மொழி) கம்மாழ்வார் இவ்வாறு கம்மை நோக்கிப் பாடியிருக்கிருர், "புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது நெஞ்சே!” (தேவாரம்) தம் நெஞ்சை கோக்கி அப்பர் இப்படி மறுகியிருக்கிரு.ர். 'அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சகமே புகும். அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனே எய்தலு மாமே.” (திருமந்திரம்) ஐம்புலன்களேயும் வலியடக்கி ஒடுக்கிய பொழுதுதான் இன்ப கிலேயமான இறைவனே எப்தலாம் எனத் திருமூலர் இங் கனம் ஒரு மூல நிலையை உணர்ந்து கூறியுள்ளார். 'அடற் கரிபோல் ஐம்புலன்களுக் கஞ்சி அழிந்த என்னே விடற் கரியாய் விட்டிடுதிகண்டாய்! விழுத்தொண்டர்க்கல்லால் தொடற் கரியாய் சுடர்மா மணியே கடுதிச் சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்கும் கறைக் கண்டனே" (திருவாசகம்) புலன்களின் புலை நிலைகளை விளக்கி இறைவனை நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாறு உ ரு கி உரையாடி யிருத்தலால் அவற்றின் அடலும் மிடலும் ஆடலும் அறியலாகும். வேட்டைப் புலப்புலேயர் மேவாதவண்ணம் மனக் காட்டைத் திருத்திக் கரைகாண்பது எங்காளோ? ஐவரொடுங் கூடாமல் அக்தரங்க சேவைதந்த தெய்வ அறிவே சிவமே பராபரமே!’ (காயமானவர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/356&oldid=1326522" இலிருந்து மீள்விக்கப்பட்டது